சளியை மட்டுமா போக்கும் திப்பிலி; பாலியல் ஆரோக்கியம் என எத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளது பாருங்கள்!
சளியை மட்டுமா போக்கும் திப்பிலி, பாலியல் ஆரோக்கியம் என எத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளது பாருங்க. இந்த மூலிகையில் உள்ள நற்குணங்கள் என்ன?
இந்தியாவின் புழக்கத்தில் உள்ள மூலிகைகளில் திப்பிலியும் ஒன்று. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. திப்பிலி கல்லீரல் பிரச்னைகளைப் போக்கி, மஞ்சள் காமாலைக்கு குணமளிக்கிறது. இது பாக்டீரியா தொற்றுக்களைப் போக்குகிறது. இது உடல் எடை குறைக்க உதவுகிறது. படுக்கையறையில் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. வலியைப் போக்கி செக்ஸ் உணர்வைத் தூண்டுகிறது. எலும்பு மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. திப்பிலியை மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தினால், அது சுழற்சி சிறப்பாக நடக்க உதவுகிறது. உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை தூண்டுகிறது. வலிப்பு மற்றும் காலரா போன்ற நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. தலைவலி, பல்வலிக்கு தீர்வு கொடுக்கிறது. சளி, இருமலுக்கு விரைவில் தீர்வளிக்கிறது. காய்ச்சலைக் குறைக்கிறது. செரிமானக் கோளாறுகளைப் போக்கி, வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது. ஆஸ்துமாவைப் போக்குகிறது. திப்பிலி பைப்பர் லாக்னம் என்ற மரத்தின் பழமாகும். இவை சூரிய ஒளியில் காயவைக்கப்பட்டு, நிழலிலும் உலர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
திப்பிலியில் ஆல்கலைட்கள், பீட்டா சிட்டோஸ்டிரால் மற்றும் வலிக்கு நிவாரணம் தரும் குணங்கள் உள்ளன. இதில் யூஜினால், கிளைக்கோசைட்னய், பெப்பரின், ரிசின்கள், சரிக்கரை, கொழுப்பு, எண்ணெயை, பிப்லார்டைன், மைர்சின், டெர்பினாய்ட்கள், குயிர்செடின், ட்ரையானான்டேன், சில்வாடைன் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கும் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்த தாவரத்தின் வேர்கள் கூட வலி மற்றும் வீக்கத்தைப்போக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஆரோக்கிய நன்மைகள்
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் மிகவும் பொதுவான நோயாக உள்ளது. இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது அல்லது குறைவதால் ஏற்படுகிறது. இதை நீங்கள் சரியான முறையில் பரிசோதித்துக்கொள்ளாவிட்டால், உடல் உறுப்புகள் செயலிழப்பு முதல் உயிரிழிப்பு வரை ஏற்படுகிறது. இதற்கு விரைவான தீர்வு கிடையாது. இதை கட்டுக்குள் வைப்பதுதான் சிறந்த வழி. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளில் திப்பிலி பயன்படுத்தப்படுகிறது. ரத்தித்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கல்லீரல் கோளாறுகள்
ஆரோக்கியமான உடலின் ஆரோக்கியமான அறிகுறி கல்லீரல்தான். உங்கள் செரிமான மண்டலம் சிறந்து விளங்க முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் மற்றும் எண்சைம்களுக்கு உதவுகிறது. நமது உணவுப்பழக்கத்தால் இன்றைய காலத்தில் கல்லீரல் கோளாறுகள் அதிகளவில் ஏற்படுகின்றன. கல்லீரை திப்பிலி காக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களைக் காத்து, மஞ்சள் காமாலையைத் தடுக்கிறது.
பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிராக போராடுகிறது
பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் திப்பிலியில் உள்ளது. நம்மைச்சுற்றி பாக்டீரியாக்கள் விரவிக்கிடக்கின்றன. இவை உடலில் எளிதாகத் தொற்றிக்கொள்கின்றன. அவற்றை தடுத்த முடியும். திப்பிலி பாக்டீரியாக்கள் தொற்றில் இருந்து உடலைக் காக்கிறது. இதன் தண்டு அல்லது வேர் அதற்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
நாம் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குப்பை உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளவேண்டும். அதை செய்யாமல் உடல் பருமனால் அவதிப்படுகிறோம். இதனால் உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டும் உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. திப்பிலி அதற்கு உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. தேவையற்ற நச்சுக்களைப் போக்குகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் போகிறது. உணவு கட்டுப்பாடு, உடல் எடை குறைப்பு மருந்துகளைப் போலன்றி, உடல் எடை குறைக்க திப்பிலியைப் பயன்படுத்தும்போது அது உங்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
ஆக்ஸிஜன்
உடல் உறுப்புகள் இயங்க அவற்றுக்கு தங்குதடையற்ற ஆக்ஸிஜன் கிடைக்கவேண்டும். அது கிடைக்காவிட்டால் மருத்துவ சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே ரத்தத்தின் வழியான உங்கள் உடல் ழுமுவதற்கும் ஆக்ஸிஜன் கிடைப்பது அவசியம். திப்பிலியில் ஆக்ஸிஜன் அளவைத் தூண்டி, மூளை மற்றும் உடல் உறுப்புக்களைக் காக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
உங்கள் உடலில் எலும்புகள் வலுவாக இருந்தால், திப்பிலி உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களை வலுவாக்குகிறது. எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கொடுக்கிறது.
மாதவிடாய்
திப்பிலி, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. இது கடும் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மாதவிடாய் வலிகள் ஏற்படாமல் தடுக்கிறது. சோர்வைப் போக்குகிறது. கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது கருப்பையில் செயல்பாடுகளைத் தூண்டி, குழந்தைபேறை விரைவாக்குகிறது. கருப்பை விரைவில் குணமடைய பிரசவத்துக்குப் பின்னர் உதவுகிறது.
பாலியல் உணர்வுகள்
திப்பிலியில் உள்ள குணங்கள் பாலியல் உணர்வுகளைத் தூண்டுகிறது. இது உங்கள் உடலை அமைதிப்படுத்துகிறது. இதனால் உங்களால் செக்ஸில் சிறந்து விளங்க முடிகிறது. பாலியல் உணர்வுகளைத் தூண்டுகிறது.
மற்ற நன்மைகள்
தலைவலி மற்றும் பல் வலிக்கு தீர்வு தருகிறது. காலரா மற்றும் வலிப்பு நோய்களை குணப்படுத்துகிறது. சளி, இருமலைப்போக்குகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவுக்கு தீர்வு தருகிறது. கோமா நோயாளிகள் விரைவில் மீள உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வயோதிக தோற்றத்தைப்போக்குகிறது. பக்கவாதத்தைத் தடுக்கிறது. வயிற்றுவலியைப் போக்குகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்