திப்பிலி கஞ்சி : வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  திப்பிலி கஞ்சி : வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!

திப்பிலி கஞ்சி : வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Updated Jun 04, 2025 09:54 AM IST

திப்பிலி கஞ்சி : திப்பிலியில் கஞ்சி செய்வது எப்படி என்று பாருங்கள்.

திப்பிலி கஞ்சி : வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!
திப்பிலி கஞ்சி : வித்யாசமான ரெசிபி; திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி; ஆரோக்கியமும், சுவையும் நிறைந்தது!

தேவையான பொருட்கள்

• புழுங்கல் அரிசி குருணை – ஒரு கப்

• கருப்பு உளுந்து (ஊடைத்தது) – அரை கப்

• பனைவெல்லப்பாகு – அரை கப்

• ஏலக்காய் – 2

• தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

• திப்பிலிப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. அடிக்கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவேண்டும். கொதி வந்தவுடன் அரை மணி நேரம் ஊறவைத்து கழுவி சுத்தம் செய்த அரிசி குருணை மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து வேகவைக்கவேண்டும்.

2. நன்றாக வெந்தவுடன், அதில் திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி, பனைவெல்லப்பாகு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். கஞ்சி பதத்திலே எடுத்து பருகவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

ஆனால் காய்ச்சல் காலத்தில் சாப்பிடும்போது, ஊறுகாய் மற்றும் அப்பளம் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். மழைக்காலத்தில் இந்த கஞ்சியை வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துவந்தால், சளி, இருமல், காய்ச்சல் உங்களை அண்டாது.

குறிப்பாக இது இனிப்பு சுவையில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் கட்டாயம் மீண்டும், மீண்டும் ருசிக்கத்தூண்டும் என்பதால் பெரியவர்களுக்கும் பிடிக்கும். திப்பிலியில் உள்ள எண்ணற்ற நற்குணங்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.எனவே இந்தப் கஞ்சியை ஒருமுறை ருசித்துப் பாருங்கள்.