Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!

Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!

Priyadarshini R HT Tamil
Published Jun 18, 2024 11:00 AM IST

Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பாக உள்ளதா? இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் செய்து அசத்துங்கள்.

Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
Tiffin Sambar Without Dal : பருப்பே இல்லாமல் சாம்பார் செய்ய முடியும் என்றால் வியப்பா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 15

பச்சை மிளகாய் – 2

நறுக்கிய கேரட் – கால் கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2

வரமல்லி – ஒரு ஸ்பூன்

மிளகு – 4

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி தழை – கைப்பிடியளவு

நெய் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

மிக்ஸி ஜாரில் பொட்டுக் கடலை (உடைத்த கடலை) மிளகாய் வற்றல், மிளகு மற்றும் வரமல்லி சேர்த்து பொடித்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

பின் பச்சை மிளகாய், கேரட் மற்றும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவேண்டும். அத்துடன், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி வதங்கியவுடன், மஞ்சள்தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து வேகவிடவேண்டும்.

பொடித்த பொட்டு, கடலை கலவையை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும்.

காய்கறிகள் பதமாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கலந்து பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவேண்டும்.

சாம்பார் நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும். கடைசியாக நெய் விட்டு கலந்து பத்து நிமிடங்கள் மூடிவைக்கவேண்டும். சுலபமான பருப்பு இல்லாத டிபன் சாம்பார் தயார். 

சாம்பார் இன்னும் கெட்டியாக வேண்டுமென்றால், இரண்டு ஸ்பூன் இட்லி மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவேண்டும். நல்ல கெட்டியாகவும் இருக்கும்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.