Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்று எப்போதும் குழப்பமா? இதோ சூப்பர் சுவையாக செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்று எப்போதும் குழப்பமா? இதோ சூப்பர் சுவையாக செய்யலாம்!

Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்று எப்போதும் குழப்பமா? இதோ சூப்பர் சுவையாக செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2025 12:48 PM IST

Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்ற குழப்பம் இனி வேண்டாம். இதை ஈசியா செய்து முடித்துவிடலாம்.

Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்று எப்போதும் குழப்பமா? இதோ சூப்பர் சுவையாக செய்யலாம்!
Tiffin Recipe : என்ன டிபஃன் செய்வது என்று எப்போதும் குழப்பமா? இதோ சூப்பர் சுவையாக செய்யலாம்! (chettinadu cook book)

தேவையான பொருட்கள்

சம்பா ரவை – ஒரு கப்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 2

மிளகு – கால் ஸ்பூன்

பிரியாணி இலை – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு – 1

பச்சை பட்டாணி – அரை கப்

காளி ஃப்ளவர் – ஒரு கப்

சுரைக்காய் – அரை கப்

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

(உங்களுக்கு பிடித்த அல்லது தேவையான வேறு காய்கறிகளும் எடுத்துக்கொள்ளலாம்)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சாம்பார் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், கறிவேப்பிலை என அனைத்தும் சேர்த்து நன்றாக பொரியவிடவேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, காளி ஃப்ளவர், சுரைக்காய் மற்றும் தக்காளி என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

அடுத்து சம்பா ரவையை சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், அனைத்தும் நன்றாக வெந்து சூப்பர் சுவையான ரெசிபி தயார். மல்லித்தழை தூவி இறக்கலாம். நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து அலங்கரிக்கலாம். ஆனால், அது முற்றிலும் உங்கள் விருப்பம். இதற்கு தொட்டுக்கொள்ள எந்த சட்னியும் நன்றாக இருக்கும் அல்லது கிரேவிகளும் சூப்பர் மேட்ச் தான்.

நீங்கள் டிஃபனுக்கு என்ன செய்வது என்று குழம்பினால், இதோ இதை எளிதாக செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். இதற்கு பெரிதாக சைட் டிஷ் கூட தேவைப்படாது. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.