டிபஃன் காம்போ : அரிசி மாவும் இல்லை, ரவையும் சேர்க்கல, சூப்பர் சுவையா, கிரிஸ்பியா ஒரு தோசை ரெசிபி! அதுக்கு ஏற்ற சைட் டிஷ்
டிபஃன் காம்போ : காலை அல்லது இரவு உணவுக்கு என்ன செய்வது என்று குழம்ப வேண்டாம். இந்த தோசையை சட்டென்று செய்து, இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னியை அரைத்துவிடவேண்டும். எளிதாக செய்யக் கூடிய அந்த இரண்டு ரெசிபியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தோசை என்றாலே ஒன்று அரிசி மாவு அல்லது ரவை அல்லது கோதுமை இவற்றில்தான் செய்ய முடியும். ஆனால், இவை எதுவும் இல்லாமலே தோசை வார்க்கலாம். அதுமட்டுமின்றி அது ஆரோக்கியத்தையும் தரும் என்றால் உங்களுக்கு எத்தனை மகிழச்சியானது. மேலும் இந்த தோசையை இன்ஸ்டன்ட்டாக செய்ய முடியும். நீங்கள் என்றாவது மாவு அரைக்க மறந்துவிட்டால், உங்களுக்கு இந்த தோசை கைகொடுக்கும். காலை அல்லது இரவு உணவுக்கு என்ன செய்வது என்று குழம்ப வேண்டாம். இந்த தோசையை சட்டென்று செய்து, இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னியை அரைத்துவிடவேண்டும். எளிதாக செய்யக் கூடிய அந்த இரண்டு ரெசிபியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
• பாசி பருப்பு – ஒரு கப்
• ராகி – ஒரு கப்
• வர மிளகாய் – 2
• இஞ்சி – கால் இன்ச்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கப் பாசிபருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ஒரு கப் ரவை, வர மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். மாவு தயார். இதை புளிக்க வைக்கவேண்டிய தேவையில்லை. அப்படியே நேரடியாக தோசை வார்க்கலாம். புளிக்க வைத்தும் தோசை செய்துகொள்ளலாம்.
2. ஒரு தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து எடுத்து பரிமாறலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது தேங்காய்ச் சட்னிதான்.
மேலும் வாசிக்க - பொட்டுக்கடலை சட்னி எளிதாக செய்யக்கூடியது; இது இருந்தால் போதும்!
தேங்காய்ச் சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
• தேங்காய்த் துருவல் – அரை கப்
• பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்
• பச்சை மிளகாய் – 1
• உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• உளுந்து – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், உப்பு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் என அனைத்தையும் சேர்த்து போதிய தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான தேங்காய்ச் சட்னி தயார். இதை ராகி, பாசிபருப்பு தோசையுடன் பரிமாற சுவை அள்ளும்.

டாபிக்ஸ்