Thyroid Remedy : தைராய்ட்டை சரிசெய்யவேண்டுமா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானம் போதும்!
Thyroid Remedy : தைராய்ட்டை சரிசெய்ய வேண்டுமா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் பருகுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுககு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தைராய்ட்
தைராய்ட் என்பது கழுத்துக்கு கீழ் உள்ள பட்டாம்பூச்சி போன்ற ஒரு உறுப்பு, அதில் போதிய அளவு தைராய்ட் திரவம் சுரக்காவிட்டாலோ அல்லது கூடுதலாக சுரந்தாலோ இரண்டுமே பிரச்னைதான்.
இது எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். உங்கள் உடலில் எண்ணற்ற வேலைகளை தைராய்ட் ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.
உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவது இதன் முக்கிய பணி. உடல் வளர்சிதை என்பது நீங்கள் உட்கொள்ளும் உணவை ஆற்றலாக மாற்றும் ஒரு பணியாகும்.
உங்கள் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் தேவை. உங்கள் தைராய்ட் சரியாக வேலை செய்யவில்லையென்றால், அது உங்கள் முழு உடலையும் பாதிக்கும்.
தைராய்டின் அறிகுறிகள்
இதயத் துடிப்பை குறைப்பது
சோர்வு
உடல் எடை அதிகரிப்பு
அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது
மனநிலை பாதிப்பு
வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தல்
மாதவிடாயில் அதிக உதிரப்போக்கு
உங்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
செய்முறை
இந்த மூன்றையும் முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும். அடுத்த நாள் காலையில் லேசாக சூடாக்கி, வடிகட்டி வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
மல்லியில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் தைராய்ட் சுரக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். மல்லி வயிற்றில் உள்ள சூட்டை வெளியேற்றி, உடலை குளுமையாக்கி, வயிற்றுப்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடியாது.
அதனால்தான் நாம் சமையலில் அதிகளவு மல்லிப்பொடியை சேர்த்துக்கொள்கிறோம். மல்லியை பச்சையாகவும், வர மல்லியாகவும், பொடியாகவும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள உடலுக்கு அது நன்மை தருகிறது.
இந்த பானத்தை தினமுமே எடுத்துக்கொள்ளலாம். அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதது.
தைராய்ட் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வழிகள்
அயோடின், தைராய்ட் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான மினரல். தைராய்ட் சுரப்பிகள், உடல் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கு தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் தன்மைகொண்டவை.
எனினும் அயோடின் குறைபாடு தைராய்டை முறையாக இயங்கவிடாமல் கட்டுப்படுத்திவிடும் மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளையும் உடலுக்கு ஏற்படுத்திவிடும். அயோடின் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவும். மேலும் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்