Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!-thyroid remedy one week a drink thyroid postpartum belly hormonal imbalance correct - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!

Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 11:53 AM IST

Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!

Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!
Thyroid Remedy : ஒரு வாரம்! ஒரு பானம்! தைராய்ட், பிரசவத்துக்கு பின் தொப்பை, ஹார்மோன் சமமின்மை சரியாகும்!

சீரகம் – ஒரு ஸ்பூன்

(அஜீரணக்கோளாறு மற்றும் வாயுத்தொல்லையை சரிசெய்யும். வயிற்றுக்கு குளிர்ச்சியை தரும். இதனால் அல்சர் இருந்தால் அதுவும் குணமாகும். நெஞ்செரிச்சல் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்யும். வயிற்றில் உள்ள கொழுப்பையும் கரைத்து வெளியேற்றும்.

மல்லி விதை – ஒரு ஸ்பூன்

தைராய்ட் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமமின்மையையும் சரிசெய்யும். பெண்களுக்கு கர்பப்பையில் தங்கியிருக்கும் அனைத்து அழுக்குகளையும் வெளியேற்றும் தன்மை இந்த மல்லி விதைகளுக்கு உள்ளது.

சோம்பு – ஒரு ஸ்பூன்

சோம்பில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது வயிற்றில் மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்து வயிற்றை முழுவதும் சுத்தம் செய்கிறது. தினமும் இதை எடுத்துக்கொள்ளும்போது, இது உங்கள் வயிற்றை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை வெளியேற்றும்.

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

(நன்றாக அலசி சுத்தம் செய்து காய வைக்கவேண்டும். கறிவேப்பிலை முடி உதிர்வை நிறுத்தும். கருகருவென கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்)

இவையனைத்தையும் கடாயில் சேர்த்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் லேசாக வறுக்க வேண்டும். அதை நன்றாக ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். முடிந்த அளவு நல்ல பொடியாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த குறிப்பு பெண்களுக்கு வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும்.

பொடி ஆறியவுடன், இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதனுடன் ஒரு ஸ்பூன் இந்துப்பு சேர்த்து வைத்துக்கொண்டால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இதை பயன்படுத்தும் விதம்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

இதில் கருப்பட்டி பொடியை இதனுடன் கலந்து பருகினால் உடலுக்கு நன்மைகளை அளிக்கக்கூடியது.

கருப்பட்டி, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமமின்மையை சரிசெய்யும். அடிவயிற்றில் குறிப்பான கர்ப்பப்பையில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றிவிடும். மல்லி விதைகளுடன் கருப்பட்டி சேரும்போது பெண்களுக்கு ஏற்படும் தைராய்ட் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

மிதமான சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். இதற்குப்பின் காபி, டீ என எதுவும் பருகக்கூடாது. மாலை ஒருமுறை பருகுங்கள். 7 நாள் இதை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.

இதை முயற்சி செய்வதற்கு முன் தொப்பையின் அளவை எடுத்துக்கொண்டு, இதை பருகிய பின்னர் மீண்டும் அளவெடுத்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல் தைராய்ட் பரிசோதனையும் முன்னரும், பின்னரும் செய்து பாருங்கள். உங்களுக்கு மாற்றம் கட்டாயம் தெரியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.