Thyroid Remedy : தைராய்டை விரட்டியாடிக்கு காலை பானம்! 48 நாட்கள் பருக முற்றிலும் குணம் பெறலாம்!
Thyroid Remedy : தைராய்டை விரட்டியாடிக்கு காலை பானம் என்னவென்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 48 நாட்கள் பருக முற்றிலும் குணம் பெற முயற்சித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – ஒரு டம்ளர்
(மல்லியில் தண்ணீர் ஊற்றி இரவே ஊறவைத்துவிடவேண்டும்)
செய்முறை
காலையில் அதை அப்படியே சூடாக்கி வடிகட்டி வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகினால் போதும். தைராய்டு என்ற ஒரு பிரச்னை முற்றிலும் அகலும்.
கொத்தமல்லி தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்
வரமல்லி என்பது இந்திய சமையலறையில் கட்டாயம் இடம்பெறும் ஒன்று. இது இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்துப்படுகிறது. இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஓரிரவு ஊறவைக்கும்போது அதன் சத்துக்கள் அனைத்தும் இறங்கிவிடும். உங்கள் உணவில் இந்த பானத்தை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
தைராய்டை முறைப்படுத்த உதவுகிறது
வரமல்லி தண்ணீரை பருகுவதால், தைராய்டு பிரச்னைகள் குணமாகும். ஓரிரவு ஊறிய வரமல்லி தண்ணீரை முதலில் வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பருகிவிடவேண்டும். ஹார்மோன் பிரச்னைகளால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகிறது. வாதம் மற்றும் கபம் சமமின்மையால் தைராய்ட் பிரச்னைகள் ஏற்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
இரும்பு, பொட்டாசியம் மற்றும் சில முக்கிய மினரல்களுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது வரமல்லி. நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்தது. வரமல்லி விதைகள் ஊறவைத்த தண்ணீரில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
வரமல்லி செரிமானத்தை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஊறவைத்த வரமல்லி விதைகளின் தண்ணீரை பருகும்போது, வாயுத்தொல்லைகள் நீங்கும். வயிறு உப்புசம் குறையும். குடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
சில ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, வரமல்லி விதைகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் ஹைப்போகிளைசெமிக் உட்பொருட்கள் உள்ளது. வரமல்லியை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது நீரிழிவு நோய்க்கு உதவுகிறது. எனவே இந்த தண்ணீரை பருகுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும்.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
வரமல்லியில் உள்ள வீக்கத்துக்க எதிரான வேதிப்பொருட்கள், உடலில் வீக்கத்தை குறைக்கும் தன்மைகொண்டது. இந்த தண்ணீரை தொடர்ந்து பருகிவர, வீக்க கோளாறுகள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
வரமல்லியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் ஃப்ரீ ராடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது. உடலுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்ததில் இருந்து உடலை காக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமான வயோதிகத்தை எட்டுகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை இழக்க உதவுகிறது
வரமல்லியில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள், உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இந்த தண்ணீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. இதனால் தேவையற்ற பொருட்களை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வரமல்லி தண்ணீருடன் சேர்த்து சரிவிகித அளவிலான உணவு எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடை குறைக்க உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்துகிறது
மாதவிடாய் பிரச்னைகளுடன் தொடர்புடைய கோளாறுகளையும், அசவுகர்யங்களையும் சரிசெய்ய வரமல்லி உதவுகிறது. மாதவிடாய் காலங்களில், வரமல்லி விதைகளை ஊறவைத்த தண்ணீரை பருகும்போது, அது உங்கள் வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வயிற்று வலியையும் போக்குகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
வரமல்லி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இந்த வரமல்லி விதைகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, அது சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சரும பளபளப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது. எனவே நீங்கள் இடைவெளிவிட்டு, அவ்வப்போது வரமல்லி தண்ணீரை பருகவேண்டும்.
மனதை அமைதிப்படுத்தும்
வரமல்லி விதைகள் உங்கள் மனதை இயற்கை முறையில் அமைதிப்படுத்தும். டென்சனை குறைத்து மன அமைதியை அதிகரிக்கிறது. பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது. ஒரு கப் வரமல்லி விதைகள் ஊறவைத்த தண்ணீரை பருகும்போது உங்கள் நாள் புத்துணர்ச்சியுடன், அமைதியாக துவங்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்