தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thyroid Remedies : 48 நாளில் தைராய்டை அடித்துவிரட்டவேண்டுமா? இதோ இவற்றை மட்டும் செய்யுங்கள் போதும்!

Thyroid Remedies : 48 நாளில் தைராய்டை அடித்துவிரட்டவேண்டுமா? இதோ இவற்றை மட்டும் செய்யுங்கள் போதும்!

Priyadarshini R HT Tamil
May 27, 2024 12:13 PM IST

Thyroid Remedies : 48 நாளில் தைராய்டை அடித்துவிரட்டவேண்டுமா? இதோ இவற்றை மட்டும் செய்தால் போதும் அது உங்களை தைராய்டில் இருந்து விடுவிக்கும்.

Thyroid Remedies : 48 நாளில் தைராய்டை அடித்துவிரட்டவேண்டுமா? இதோ இவற்றை மட்டும் செய்யுங்கள் போதும்!
Thyroid Remedies : 48 நாளில் தைராய்டை அடித்துவிரட்டவேண்டுமா? இதோ இவற்றை மட்டும் செய்யுங்கள் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தைராய்டால் அவதிப்படுபவர்கள் பின்பற்றவேண்டியவைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு – 1

தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் இந்த உணவை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். காலை உணவுக்கு பதிலாக இதை சாப்பிட வேண்டும். காலையில் உணவுக்கு பின்னர் எடுக்கக்கூடாது. காலையில் இதை மட்டும் குடித்துவிட்டு மதியம் நேரடியாக மதிய உணவை சாப்பிடவேண்டும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 100 கிராம்

பீட்ரூட் – 50 கிராம்

கேரட் – 25 கிராம்

பசும் பால் – ஒரு டம்ளர்

(இந்த அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது)

செய்முறை

ஆப்பிள், பீட்ரூட், கேரட், காய்ச்சி ஆறிய பால் இவையனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி காலையில் உணவுக்கு பதில் பருகவேண்டும்.

காலையில் இது மட்டும்தான் உணவு வேறு எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை 48 நாட்கள் செய்ய தைராய்ட் பறந்தோடும்.

குறிப்பு – 2

தேவையான பொருட்கள்

சாம்பிராணி மரத்தின் பிசின் – ஒரு ஸ்பூன்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

சாம்பிராணி மரத்தில் இருந்து பிசினை எடுத்து உலர்த்தி நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை தேனில் கலந்து சாப்பிட்டால் தைராய்ட்டு முற்றிலும் குணமாகும்.

தைராய்ட் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வழிகள்

அயோடின், தைராய்ட் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான மினரல். தைராய்ட் சுரப்பிகள், உடல் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கு தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் தன்மைகொண்டவை.

எனினும் அயோடின் குறைபாடு தைராய்டை முறையாக இயங்கவிடாமல் கட்டுப்படுத்திவிடும் மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளையும் உடலுக்கு ஏற்படுத்திவிடும். அயோடின் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவும். மேலும் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்