தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thyroid In Children : குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னை! அறிகுறிகளும், ஆபத்துக்களும் இவைதான்!

Thyroid in children : குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னை! அறிகுறிகளும், ஆபத்துக்களும் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2024 06:01 PM IST

Thyroid in children : குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னை! அறிகுறிகளும், ஆபத்துக்களும் இவைதான்!

Thyroid in children : குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னை! அறிகுறிகளும், ஆபத்துக்களும் இவைதான்!
Thyroid in children : குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னை! அறிகுறிகளும், ஆபத்துக்களும் இவைதான்!

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உடல் வளர்சிதை மாற்றம் என அனைத்துக்கும் தைராய்ட் சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லையெனில், இது பல்வேறு தைராய்டு பிரச்னைகளை உருவாக்குகிறது. அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.

எனவே தைராய்டு பிரச்னைகள், அறிகுறிகள் மற்றும் முன்னரே கண்டுபிடித்து முறையான சிகிச்சையளிக்க வேண்டுமெனில் அவை குறித்த விழிப்புணர்வு நமக்கு வேண்டும். தைராய்டு குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

குழந்தைகளில் தைராய்டு கோளாறுகளின் வகைகள்

குழந்தைகளில் ஹைப்போ தைராய்டிசம் – போதியளவு ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்காவிட்டால், ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது. இது பிறப்பிலும் இருக்கலாம். பின்னரும் ஏற்பட்டிருக்கலாம். இதன் அறிகுறிகள் சோர்வு, வளர்ச்சியின்மை, தாமதமாக பூப்பெய்தல், மலச்சிக்கல், வறண்ட சருமம், மனநலக்கோளாறு ஆகியவையாகும்.

ஹைப்பர் தைராய்டிசம் – தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பியில் இருந்து அதிகம் சுரப்பதால் ஏற்படுவது. ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எடையிழப்பு, பசி அதிகரிப்பது, இதயம் வேகமாக துடிப்பது, எரிச்சல் மற்றும் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுவது ஆகியவை ஏற்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

தைராய்டு நோடுல்ஸ் மற்றும் கோய்டர் – தைராய்டு நோடுல்ஸ் அல்லது பெரிதாவது என்பது குழந்தைகளுக்கு எவ்வித அறிகுறியும் தோன்றாமல் ஏற்பட்டுவிடும். இதனால் குழந்தைகளால் சுவாசிக்க முடியாது. விழுங்க முடியாது அல்லது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது என இதன் அறிகுறிகள் இருக்கும். இது பெரும்பாலும் பிரச்னையில்லை. சில நேரங்களில் இதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

தைராய்டு புற்றுநோய் – இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான ஒன்று. இது தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கழுத்தில் வலியில்லா கட்டி, விழுங்வதில் சிரமம், பேசுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் இரண்டுமே, குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதில் உள்ள சிக்கல்கள் என்ன?

இதய கோளாறுகள்

ஹைப்பர் தைராய்டிசம் இதய கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது இதய பலகீனம் மற்றும் செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஹைப்போதைராய்டிசத்தால், அதிக கொழுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அது பிற்காலத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.

வளர்ச்சியில் தாமதம்

ஹைப்போதைராய்டிசத்துக்கு சிகிச்சையளிக்காவிட்டால், அது நினைவாற்றல் வளர்ச்சி மற்றும் கற்றல் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது.

மனநல பாதிப்பு

இரண்டுமே பயம், பதற்றம், மனஅழுத்தம், மனநிலை மாற்றம் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்துகிறது.

வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்னை

சிகிச்சையளிக்கப்படாத தைராய்டு கோளாறுகள் வளர்ச்சி, பூப்பெய்வது ஆகியவற்றை பாதிக்கிறது. இது பின்னர் கருவுறுதலையும் பாதிக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் தைராய்களுக்கு சிகிச்சைகள் உண்டு. அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சையளித்தாலே போதும். வழக்கமான செக்அப்கள் மற்றும் ரத்த பரிசோதனைகள், சமமின்மையை தெரிந்துகொள்ள மிகவும் அவசியம். சிகிச்சைகள் குறிப்பிட்ட நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.