Thyroid Health : தைராய்டை அடித்து விரட்டும் உணவுகள் இவைதான் தெரிந்துகொள்ளுங்கள்!
Thyroid Health : தைராய்டை அடித்து விரட்டும் உணவுகள் இவைதான் தெரிந்துகொள்ளுங்கள்!
தைராய்ட் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வழிகள்
அயோடின், தைராய்ட் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான மினரல். தைராய்ட் சுரப்பிகள், உடல் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கு தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்யும் தன்மை கொண்டவை.
எனினும் அயோடின் குறைபாடு தைராய்டை முறையாக இயங்கவிடாமல் கட்டுப்படுத்திவிடும் மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளையும் உடலுக்கு ஏற்படுத்திவிடும். அயோடின் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது தைராய்ட்டு ஆரோக்கியத்துக்கு உதவும். மேலும் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
கடற்பாசி
நோரி, கெல்ப் மற்றும் வாக்கமே போன்ற கடற்பாசி வகைகளில் அயோடின் உள்ளது. இது ஆசிய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை சூப் மற்றும் சாலடில் சேர்த்துக்கொள்ளலாம். சூசி உணவில் ரேப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உணவில் கடற்பாசியை சேர்த்துக்கொள்வது, போதியளவு அயோடீன் தேவையை பூர்த்தி செய்து, உங்கள் தைராய்ட் சுரப்பி நன்றாக வேலை செய்ய உதவும்.
மீன்
ஃபேட்டி ஃபிஷ் வகைகள், காட், டுனா மறறும் சால்மன் ஆகிய மீன்களில் அதிகளவில் அயோடின் சத்து நிறைந்துள்ளது. இந்த மீன்கள் ஒமேகா 3 போன்ற முக்கிய ஃபேட்டி ஆசிட்களை மட்டும் கொடுக்கவில்லை. இவை தைராய்ட் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன. கிரில் செய்யப்பட்ட மீன்கள் அல்லது பேக் செய்யப்பட்ட மீன்கள் சுவை மிகுந்தவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தைராய்ட் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.
பால் பொருட்கள்
பால், யோகர்ட் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் அயோடின் உள்ளது. சமைப்பதற்கு அயோடின் உப்புக்களையே பயன்படுத்துவது உங்களுக்கு தேவையான அயோடின் சத்துக்களை வழங்கக்கூடியது. பாலை பல்வேறு உணவுகளில் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதை நீங்கள் உங்கள் உணவுகளில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
முட்டை
முட்டை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அயோடின் உள்ளது. கூடுதலாக இதில் செலினியம் மற்றும் சிங்க் உள்ளது. இது தைராய்ட் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான மினரல், வேகவைத்த மற்றும் பொரித்த முட்டையை உங்கள் உணவில் அன்றாடம் எடுத்தக்கொள்வது நல்லது. தைராய்ட் சுரபி நன்றாக வேலை செய்வதற்கு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த, எளிமையான வழி.
அயோடின் உப்பு
அயோடின் உப்பு, அயோடின் சேர்த்துக்கொள்வதற்கான சிறந்த மற்றும் எளிய வழி. உங்களின் வழக்கமான உப்பை, அயோடின் உப்பு மூலம் மாற்றிவிடுங்கள். அதுவே உங்களின் அன்றாட அயோடின் தேவையை பூர்த்தி செய்துவிடும். உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், மிதமான அளவு உப்பு சேர்ப்பது மிகவும் அவசியம்.
பெரிகள்
பெரிகள், குறிப்பாக ஸ்டராபெரிகள் மற்றும் கிரேன்பெரிகளில் அயோடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இந்த பழங்கள் சுவை நிறைந்தவை மட்டுமின்றி, இவற்றையும் நீங்கள் பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். சாலட்கள், ஸ்முத்திகளாக செய்து சாப்பிடலாம். யோகர்ட்டில் டாப்பிங்காக வைத்து சாப்பிடலாம்.
பீன்ஸ் மற்றும் பருப்புகள்
பீன்ஸ்கள் மற்றும் பருப்புகளில், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் அயோடினும் உள்ளது. இவை பல்வேறு வகை உணவு வகைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் சாலட், சூப் ஆகியவற்றை செய்யலாம். உங்கள் உணவுகளில் இதை சேர்த்துக்கொள்வதும், உங்கள் தைராய்ட் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
நட்ஸ்கள் மற்றும் விதைகள்
பாதாம், சூரிய காந்தி விதைகள், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் உள்ளிட்ட நட்ஸ்கள் மற்றும் விதைகள் உடலுக்கு தேவையான அயோடினை வழங்குவதுடன், தைராய்ட் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன. ஒரு கைப்பிடியளவு நட்ஸ்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நல்லது. இவை உங்களுக்கு சுவையை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. உங்களின் அன்றாட அயோடின் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
டாபிக்ஸ்