Throat Infection : தொண்டை தொற்று, சளி, இருமல், காய்ச்சலை கன நிமிடத்தில் துரத்தும்! இது மட்டும் ஒரு ஸ்பூன் போதும்!
Throat Infection : 5 நாட்களுக்கு தேவையான அளவை செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டால் உங்களுக்கு தொண்டையில் ஏற்பட்ட அனைத்து தொற்றகளும் முற்றிலும் குணமாகும்.
தொண்டையில் உள்ள தொற்று, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை 5 நிமிடத்தில் குணப்படுத்தும் டிப்ஸ் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இதை ஒருமுறை சாப்பிட்டாலே தொண்டையில் உள்ள தொற்று குறையும். ஆனால், நீங்கள் இதை தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டால் அவை முற்றிலும் குணமாகும்.
சுவாசப்பாதைகள் மற்றும் நுரையீரலில் தங்கியுள்ள தொற்றுக்கிருமிகளைக் கூட அடித்து வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்
மிளகு – 10
பட்டை – 1
கிராம்பு – 8
ஏலக்காய் – 1
வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது)
(நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி கூட சேர்த்துக்கொள்ளலாம்)
இஞ்சி – ஒரு இன்ச்
செய்முறை
தாளிப்பு கரண்டியை சூடாக்கி, இதை நல்ல மணம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை ஒரு குட்டி உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். இடித்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவேண்டும்.
அதே கரண்டியில் வெல்லத்தை சேர்த்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் மற்றும் இஞ்சியை துருவி சேர்த்து நன்றாக உருகவிடவேண்டும். உருக, உருக அதில் மூழ்கி இஞ்சி நன்றாக வெந்திருக்கும்.
வெல்லம் பாகுபதம் வரும்போது, இதில் பொடித்து வைத்துள்ள பொடியில் ஒரு ஸ்பூன் சேர்க்கவேண்டும். அதையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
நன்றாக இதை கிளறகிளற ஒரு நறுமணம் வீசும். அந்த மணம் வீட்டையே சூழும். இதை முகர்ந்தாலே உங்கள் மூக்கடைப்புக்கு இதமாக இருக்கும்.
இதில் சேர்த்துள்ள கிராம்பு, இஞ்சி, மிளகு என அனைத்தும் சளிக்கிருமிகளை அடித்து விரட்டும் தன்மை கொண்டது. சளியை போக்கும் வல்லமை பெற்றவை. அதிக இருமலைக் கட்டுப்படுத்தும். அதற்கு ஏலக்காய் உதவும்.
சுருங்கிய சுவாசப்பாதையை விரிவடையச்செய்யும் தன்மை இதற்கு உண்டு. இதை ஆறியவுடன், ஒரு ஸ்பூண் அளவு எடுத்து வாயில் போட்டு, உமிழ்நீருடன் சுவைத்து சாப்பிடவேண்டும்.
இதை அதேஅளவு எடுத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளலாம். இதை அதிகளவில் செய்து வைத்துக்கொண்டு, சிறிய உருண்டையை தினமும் சாப்பிடலாம்.
ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடலாம். ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய தேவையில்லை. சாதாரண அறை வெப்பத்தில் வைத்தாலும் கெட்டுப்போகாது.
5 நாட்களுக்கு தேவையான அளவை செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டால் உங்களுக்கு தொண்டையில் ஏற்பட்ட அனைத்து தொற்றகளும் முற்றிலும் குணமாகும்.
அந்த உருண்டையை வாயில்போட்டு சுவைத்து சாப்பிடவேண்டும். அவ்வாறு நீங்கள் சாப்பிடும்போது இது மிதமாக தொண்டையில் இறங்கி அங்குள்ள தொற்றுகள் மற்றும் கிருமிகளைப் போக்கும்.
காரம் மற்றும் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். அடிக்கடி தொற்றுகள் ஏற்படுகிறது. அதற்கு இதை தினமும் சாப்பிட்டு வர உங்களுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.
தொடர்ந்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல், சளி என அனைத்தையும் குணப்படுத்தும். கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்