காலை பானம் : காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலை பானம் : காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

காலை பானம் : காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Published Apr 01, 2025 06:00 AM IST

காலையில் முதல் வேலையாக நீங்கள் சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகியுள்ளீர்களா? இதை நீங்கள் சரியான முறையில் செய்யும்போது உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

யாருக்குத்தான் தங்களின் நாளை ஒரு இதமான பானத்தைப் பருகி துவங்குவது பிடிக்காது. அது பலருக்கு டீ அல்லது காபிதான். சூடான தண்ணீரில் தேனைக் கலந்து பருகுவது மற்றொரு நல்ல தேர்வு. இது ஆரோக்கியமானதும் கூட. தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது, உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்கள் நினைப்பதைவிட அதிக நன்மைகளைக் கொடுக்கின்றன. சூடான தண்ணீர் மற்றும் இனிப்பான தேனும், உடல் எடை முதல் நோய் எதிர்ப்பு வரைத் தருகின்றன.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது, உங்கள் உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. தேனை சூடான தண்ணீரில் கலந்து பருகும்போது அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இது உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது. அதிக கலோரிகள் கொண்ட சர்க்கரை உணவுகள் சாப்பிட வேண்டும் என்று ஆர்வத்தைக் குறைக்கிறது. எனவே சாப்பாட்டை அளவாக்கி, ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது.

நீர்ச்சத்துடன் இருக்கச் செய்கிறது

நமது உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். ஆனால் அதை வெறும் தண்ணீராகப் பருகுவது சிலருக்கு கடினம். எனவே அதில் சில துளிகள் தேன் கலந்து பருகும்போது, அது எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. சூடான தண்ணீரில் தேன் கலந்து காலையில் பருகுவது உங்களை நீர்ச்சத்துடன் இருக்கச் செய்கிறது. ஆரோக்கியம் மற்றும் எண்ணற்ற உடல் இயக்கங்கள் மற்றும் முறையான நீர்ச்சத்துக்களுக்கும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

தேன் செரிமான மண்டலத்துக்கு இதமளிக்கிறது. எரிச்சலைக் குறைக்கிறது. எனவே இதமான தண்ணீருடன் தேனை கலந்து பருகும்போது, அது உங்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. தேனில் ப்ரீபயோடிக் உட்பொருட்கள் உள்ளன. அது உங்கள் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது

நோய் எதிர்ப்பு என்று வரும்பபோது, தேன் ஒரு சிறந்த தேர்வு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிமைக்ரோபையல் உட்பொருட்கள் நிறைந்துள்ளது. இதனால், தேனை சூடான தண்ணீருடன் கலந்து பருகும்போது, அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. இந்த பானம் உங்களை தொற்றுகளிடம் இருந்து காத்து ஆரேக்கியமாக இருக்கச் செய்கிறது.

உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது

தேன், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அழகு சாதன பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்துக்களும் மற்றும் ஆன்டிமைக்ரோபையல் குணங்களும் அதற்கு காரணம். சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது, அது சருமத்துக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. இது முகப்பருக்களைக் குறைக்கிறது. பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்துக்கு உதவுகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

தேனில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்களுக்கு தொண்டை கரகரப்பு முதல் எண்ணற்ற வீக்கக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. இதனால்தான் வீக்கம் தொடர்பான அசவுகர்யங்களைப் போக்குவதில் சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகுவது உதவுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் இது மிகவும் நன்மை கொடுக்கிறது.

புண்களை குறைக்கிறது

இந்த பானத்தை நீங்கள் பருகும்போது, அது புண்கள் மற்றும் வலிகளைப் போக்க உதவுகறிது. தேனின் இயற்கை இனிப்பு குணம், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு தசைகளில் ஏற்டும் வலிகளைப் போக்குகிறது. குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின்னர் ஏற்படும் தசை வலிகளைப் போக்குகிறது. இதில் வலிகளைப் போக்கும் உட்பொருட்களும் உள்ளன.

தேன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்தாலும், அதையும் அளவாகத் தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் தேனை பருகும்போது, அது அதிகம் சாப்பிட தூண்டும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லதல்ல. அலர்ஜி உள்ளவர்கள் தேனை கவனமாக சாப்பிடவேண்டும்.

தினமும் பருகலாமா?

இதை தினமும் பருகுவது பெரும்பாலானோருக்கு பாதுகாப்புதான். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறதுதான். ஆனால், சில விஷயங்களைக் மனதில் கொள்ளவேண்டும். சூடான தேன் சில நச்சு விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது எண்ணற்ற நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே மிதமான அளவே சிறந்தது. மேலும் தேனை சூடாக்கக் கூடாது. மிதமான சூடுள்ள தண்ணீரில் தேனை கலந்து சாப்பிடவேண்டும். கொதிக்கும் தண்ணீரிலும் தேனை கலக்கக் கூடாது. இது உடலுக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இதை பருகும்போது உங்கள் உடலுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தினால், நீங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது. தனிப்பட்ட அறிவுரைகளைக் கேட்டு பயன்பெறலாம். எனவே மேற்கண்ட பலன்களுக்காக தேன் கலந்த சூடான பானத்தை பருக நினைப்பவர்கள், எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாதபோது பருகலாம்.

நீரிழவு நோயாளிகள்

தேன் இனிப்புச் சுவை கொண்டது என்பதால், நீரிழிவு நோயாளிகள் சூடான தண்ணீரில் தேன் கலந்து பருகும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அல்லது தவிர்க்கவேண்டும். தேன், இயற்கை இனிப்புச் சுவை கொண்டது. இதில் உள்ள அதிக இனிப்புச் சுவை ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பானம் ஏற்றதல்ல. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நீங்கள் எதிர்பார்க்காத அளவு அதிகரிக்கச் செய்து ஆரோக்கிய கோளாறுகளை எற்படுத்தும்.

இவ்வாறு தீபாலி ஷர்மா தெரித்துள்ளார்.