படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துவது இதுதான்! கணவன் – மனைவி நெருக்கம் அதிகரிக்க உதவும் 5 வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துவது இதுதான்! கணவன் – மனைவி நெருக்கம் அதிகரிக்க உதவும் 5 வழிகள்!

படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துவது இதுதான்! கணவன் – மனைவி நெருக்கம் அதிகரிக்க உதவும் 5 வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 10:15 AM IST

படுக்கையறையில் பாதிப்பின்றி கணவன் - மனைவி நெருக்கத்தை அதிகரிக்க உதவும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துவது இதுதான்! கணவன் – மனைவி நெருக்கம் அதிகரிக்க உதவும் 5 வழிகள்!
படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துவது இதுதான்! கணவன் – மனைவி நெருக்கம் அதிகரிக்க உதவும் 5 வழிகள்!

நீங்கள் உங்கள் பார்ட்னருடன் நெருக்கமாக இருந்தால், நீங்கள் இருவரும் திறந்த மனதுடன் இருக்க அது உதவுகிறது. இந்த ஆழ்ந்த பிணைப்பு உங்களுக்கு நம்பிக்கை, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இருவருக்குமான ஆதரவு மற்றும் மதிப்பு கிடைக்கிறது. நெருக்கமாக இருக்கும்போது, உங்கள் இணையரிடம் நீங்கள் எளிதாக ஆசைகளை வெளிப்படுத்தலாம். எல்லைகளை, கடினமான விஷயங்களை மற்றும் வாழ்வில் எடுக்கும் முடிவுகளை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம். ஒன்றாக இணைந்திருத்தல் மட்டும் நெருக்கமல்ல, உண்மையான ஆழ்ந்த தொடர்பு. இதனால் உறவு நீடிக்கிறது. மனதுக்கு முழுமை கிடைக்கிறது. நெருக்கம் உங்களை ஒன்றிணைந்து வளர உதவுகிறது. உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் குறிப்புக்களை தெரிந்துகொள்ளுங்கள்

உங்களை வெளிப்படுத்துங்கள்

உரையாடல், தெளிவான, வெளிப்படையான, நேர்மறையான உரையாடல்தான் மிகவும் முக்கியம். எனவே உங்களை வெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களின் தேவைகளையும், ஆசைகளையும் உங்களின் இணையரும் தெரிந்துகொள்வார்கள். இது உங்களுக்கு ஆழ்ந்த தொடர்பை உருவாக்க உதவும்.எனவே உங்களுக்கு பிடித்தவை மற்றும் பிடிக்காதவை குறித்து நீங்கள் உங்கள் இணையருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வெளிப்படையான உரையாடல் நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்துகிறது. இரண்டு பேரும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார்கள், அவர்களின் தேர்வுகள் தெரிகிறது. இது அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது. இது உங்கள் உறவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நெருக்கமான தருணங்களைக் கொடுக்கிறது. இதனால் இருவருக்குமான தொடர்பு அதிகரித்து, பரஸ்பர திருப்தி ஏற்படுகிறது.

நேர்மறையான உடல் மொழி

உங்களுக்கு நெருக்கமான நேரங்களில் நீங்கள் உங்களை வெளிப்படுத்து நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொருத்து அமைகிறது. நெருக்கத்தை அதிகரிக்க மற்றொரு முக்கிய குறிப்பாக உங்களை நீங்கள் நேசிப்பது உள்ளது. உங்களை நீங்கள் நேசித்தால், உங்களை நீங்கள் 100 சதவீதம் கொடுக்கிறீர்கள்.

அங்கு எவ்வித விமர்சனங்களும் இல்லை. நெருக்கம் என்பது உங்களை தன்னம்பிக்கையான உணரச் செய்வது மற்றும் உங்களை சவுகரியமாக இருக்க வைப்பதும் ஆகும். உங்கள் உடலை நீங்கள் அன்பு மற்றும் நேர்மறையான எண்ணங்களுடன் வைத்துக்கொண்டால், அது உங்களை அந்த இடத்தில் முழுமையக இருக்கவைக்கிறது. அப்போது எந்த இடையூறும் ஏற்படுவதில்லை. இதனால் நீங்கள் உங்கள் பார்ட்னருடன் வெளிப்படையாக உரையாடுகிறீர்கள் மற்றும் மகிழ்ச்சியான உணர்கிறீர்கள்.

கடந்த காலத்தை மறந்து உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து உங்களை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செல்லுங்கள். செக்ஸ் குறித்து எந்த அவமானமும் உங்கள் பிணைப்பை அதிகரிக்கும். சிலருக்கு கடந்த கால பிரச்னைகள் உங்களிக் நெருக்கமான சூழலை கெடுக்கும்.

உங்களால் திறந்த உரையாடலைக் கொண்டு இருக்க முடியாது. கடந்த கால உறவுகள், பிரிவுகள், அவமானங்கள், எதிர்மறையான செக்ஸ்வல் அனுபவங்கள் என அனைத்தும் உங்களின் ஆழ்ந்த உறவுக்கு தடையை ஏற்படுத்தலாம். எனவே கடந்த கால உணர்வுகளில் இருந்து முற்றிலும் வெளியேறி, நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது உங்கள் இணையரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது மிக முக்கியமான குறிப்பாகும்.

தெளிவான மற்றும் ஆரோக்கியமான எல்லைகள்

எந்த உறவிலும் எல்லைகள் மிகவும் முக்கியம். குறிப்பாக நெருக்கத்திலும் எல்லை அவசியம். உங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன தேவை, உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இதை வெளிப்படுத்துவது உங்களுக்கு உதவும்.

ஆரோக்கியமான எல்லைகளை வகுப்பது, உங்களின் எல்லையை புரிந்துகொள்வது, உங்கள் இணையருக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பது, அவர்களை சவுகர்யமாக உணரவைப்பது உங்கள் நெருக்கமான வாழ்வில் மிகவும் அவசியம். எல்லைகள் உங்களுக்கு பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை என அனைத்தையும் கொடுக்கிறது. இது பரபஸ்பர புரிதலை ஏற்படுத்துகிறது. இருவரின் தேவைகள் மற்றும் விருப்பங்களையும் உறுதிசெய்கிறது. இது உடல் ரீதியான எல்லை மட்டுமல்ல, மன ரீதியானதும் ஆகும்.

மன ஆரோக்கியம்

கணவன் – மனைவி நெருக்கத்துக்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உங்கள் உணர்வுகள் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் தீர்க்கப்படாத பிரச்னைகள், சவால்களுக்கு அதுதான் காரணமாகிறது. இதுவே படுக்கையறையிலும் பிரதிபலிக்கிறது. நமது உணர்வு ரீதியான மற்றும் மனரீதியான நிலைகள் நமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்திலும் பிரதிபலிக்கிறது. அது நமது நெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தீர்க்கப்படாத உணர்வு ரீதியான பிரச்னைகளை நீங்கள் விட்டுவிட்டால், அது உங்களின் படுக்கையறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது உங்கள் இணையருடனான தரமான தொடர்பை பாதிக்கிறது. உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம். இது உங்களின் வளர்ச்சி, புரிதல் மற்றும் சுய விழிப்புணர்வுக்கு உதவும். எனவே சுய அக்கறையை பழகுவது, தெரபி எடுத்துக்கொள்வழ, உணர்வு ரீதியான பிரச்னைகளை சந்திப்பது மிகவும் முக்கியம். எனவே மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.