தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  This Is The Best Time To Have Fruits For People Suffers With Diabetes

Diabetes: டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம்? தெரிந்து கொள்ளுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 21, 2024 08:47 PM IST

டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு இயற்கையாக பழங்களில் இருந்து கிடைக்கும் சார்க்கரை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்ததாது. அதேசமயம் எந்த நேரத்தில் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் நல்லது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்

டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் பழங்கள் சாப்பிட உகந்த நேரம்
டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் பழங்கள் சாப்பிட உகந்த நேரம்

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள், காய்கறிகள், பழங்களை தேர்வு செய்து சாப்பிடுவது நலம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். உணவு தேர்வுடன் அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவையும் பரிசோதித்து பார்த்து கொள்ள வேண்டும்.

பச்சை இலை காய்கறிகள், பருப்பு வகைகள், பால் சார்ந்த பொருள்கள், கொட்டை வகைகள் போன்றவை குறைவான க்ளைசெமிக் குறியீட்டை கொண்டதாக உள்ளது. என்னதான் குறைவான க்ளைசெமிக் குறியீடு இருந்தாலும் இதை சாப்பிடுவதற்கான நேரத்தை பொருத்தும் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.

பொதுவாக பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்ககூடும். எனவே பழங்களை சாப்பிடுதற்கென சில விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கிய நன்மைகள் பெறலாம்.

சாப்பிடக்கூடிய, தவிர்க்க வேண்டிய பழங்கள்

நீங்கள் சாப்பிடக்கூடிய பழங்களை தேர்வு செய்வதற்கே சில அடிப்படை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். டயபிடிஸ் இருப்பவர்களுக்கு சிறந்த பழமாக ஆப்பிள், அவகோடா, ப்ளாக்பெர்ரி, செர்ரி, கிரேப் ப்ரூட், பிளம், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உள்ளன. இந்த பழங்களில் குறைவான சர்க்கரை அளவு இருப்பதுடன், க்ளைசெமிக் குறியீடு 6 என உள்ளது.

வாழைப்பழம், கொய்யாபழம், மாம்பழம், பழ ஜூஸ்கள், திராட்சை போன்றவற்றை டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தில் கேளாறை உண்டாக்கும்.

பழங்களை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது?

ஒவ்வொரு நாளிலும் வளர்சிதை மாற்றம் என்பது மாறுபாட்டை கொண்டிருக்கும். உடலில் செரிமான நொடியானது அதிகமாக இருக்கும் போது பழங்களை சாப்பிட்டால் அது டயபிடிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். பழங்களை பகல் 1 முதல் 4 மணிக்கு இடையே சாப்பிடுவது நலம். இதுதவிர உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் சாப்பிடலாம். அப்போது தான் நமது உடல் கூடுதல் கார்ப்போஹைட்ரேட்களை விரைவாக பயன்படுத்தும்.

டயபிடிஸ் இருப்பவர்கள் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருக்கும். அவை டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு அத்தியாவசியமாக இருந்து வருகிறது. உடல் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குவதிலும், அதன் அளவை கட்டுப்படுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பழங்களை ஜூஸ் ஆக தயார் செய்து பருகுவதை விட அப்படியே சாப்பிடுவது நலம். இதன் மூலம் வைட்டமின், நார்ச்சத்து இழப்பு என சத்துக்களின் குறைபாடு ஏற்படாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்