இந்த சட்னி இருந்தா போதும்; பத்து இட்லி கூட பத்தாது! சூப்பர் சுவையான சைட் டிஷ் தயார்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த சட்னி இருந்தா போதும்; பத்து இட்லி கூட பத்தாது! சூப்பர் சுவையான சைட் டிஷ் தயார்!

இந்த சட்னி இருந்தா போதும்; பத்து இட்லி கூட பத்தாது! சூப்பர் சுவையான சைட் டிஷ் தயார்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 07, 2025 10:36 AM IST

எனவே இந்த சட்னியை ஒருமுறை செய்து சாப்பிடுங்கள். ஒருமுறை செய்து சாப்பிட இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்னி இருந்தா போதும்; பத்து இட்லி கூட பத்தாது! சூப்பர் சுவையான டிஃபன் தயார்!
இந்த சட்னி இருந்தா போதும்; பத்து இட்லி கூட பத்தாது! சூப்பர் சுவையான டிஃபன் தயார்!

தேவையான பொருட்கள்

• பொட்டுக்கடலை – ஒரு கப்

• இஞ்சி – அரை இன்ச்

• பூண்டு – 4 பல்

• வர மிளகாய் – 4

• உப்பு – தேவையான அளவு

• புளி – சிறிய கோலி குண்டு அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – அரை ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 2

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, வரமிளகாய், உப்பு மற்றும் புளி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிடவேண்டும்.

2. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வர மிளகாய் என அனைத்தும் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

3. இந்த தாளிப்பை அந்த சட்னியில் சேர்த்து கலந்துவிட்டால், சூப்பர் சுவையான சட்னி தயார்.

இதை இட்லி, தோசை, ஊத்தம், சப்பாத்தி, இடியாப்பம், பொங்கல், உப்புமா என அனைத்துடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே இந்த சட்னியை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.