தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  This Ash Gourd Juice Is Enough To Lose Weight

Weight Loss Juice : உடல் எடையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்.. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Divya Sekar HT Tamil
Feb 02, 2024 10:20 AM IST

வெள்ளை பூசணியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும், பிறகு அதில் சிறிதளவு உப்பு,மிளகுத்தூள், சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

உடல் எடையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்
உடல் எடையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்

ட்ரெண்டிங் செய்திகள்

உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை என்று உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும் அதிகம். எனவே உடல் எடையை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். குறிப்பாக ஒரு ஜூஸ் குடித்தால் போதும் உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம்.

காலையில் இருந்து இந்த அழகான ஜூஸை கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்.அதுதான் வெள்ளை பூசணி ஜூஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முக்கியமானதாக வெள்ளை பூசணி இருந்து வருகிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதோடு, உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்கி, சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

வெள்ளை பூசணியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும், பிறகு அதில் சிறிதளவு உப்பு,மிளகுத்தூள், சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

வீசிங்,சைனஸ், ஆஸ்துமா உள்ளவர்கள் இதை குடிக்க வேண்டாம். வாயிலிருந்து தொடங்கி ஆசனவாய் வரை இருக்கும் உணவு குடல் குழாய் முழுவதையும் சுத்திகரிக்கும் ஒரே ஜூஸ் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்.

இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

தினமும் வெள்ளை பூசணி சாறுடன் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் சூட்டினால் 78% கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

வெள்ளை பூசணியில் இடம்பிடித்திருக்கும் ஆக்ஜினேற்ற தன்மை உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. அத்துடன் உடலில் நீர் இழப்பு ஏற்படாமக் நீரேற்றத்துடன் இருக்க வைக்க தன்மையை கொண்டுள்ளது. இதனால் உடலும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

கலோரிகள் குறைவாக இருக்கும் வெள்ளை பூசிணி இருக்கிறது. தினமும் காலையில் இதன் சாறு பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி நீர்ச்சத்தை அதிகிரிக்கிறது. இதனால் உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது. அதேபோல் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதன் மூலம் வயிற்றில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.

அல்சர் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த அருமருந்தாக வெள்ளை பூசணி உள்ளது. அதிக காரணமான உணவுகள், நீண்ட நேரம் உணவும் உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்னைக்கு தீர்வாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்