இந்த கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு! உங்க வீட்டில எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு! உங்க வீட்டில எப்படி?

இந்த கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு! உங்க வீட்டில எப்படி?

Priyadarshini R HT Tamil
Nov 26, 2024 11:46 AM IST

உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் கணவன் - மனைவி ஜோக்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு! உங்க வீட்டில எப்படி?
இந்த கணவன்-மனைவி ஜோக்குகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு! உங்க வீட்டில எப்படி?

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.

உங்களை கலகலவென சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!

கணவனின் வேலைக்கு தகுந்த மனைவிகளின் கோபம் எப்படியிருக்கும் என்று பாருங்கள். அவர்களுக்கு கோபம் வந்தால் எப்படி திட்டுகிறார்கள் பாருங்கள்.

பைலட் மனைவி

ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ?

வாத்தியாரின் மனைவி

எந்தலையெழுத்து உங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்.

நடிகனின் மனைவி

ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்.

EB கணவனின் மனைவி

ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா!

ஆடிட்டர் மனைவி

எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்!

டிசைனரின் மனைவி

மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா!

வெட்னரி டாக்டரின் மனைவி

மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க!

இன்ஜினியர் மனைவி

எல்லா பார்ட்ஸ்சையும் உறுவிப்புடுவேன் உறுவி ஆமா!

பல் டாக்டர் மனைவி

ஒண்ணு விட்டேன் வையி பல்லு பூராம் தெறிச்சிபுடும் ஆமா!

போலிஸ்காரரின் மனைவி

ரெண்டு போட்டேன்னு வையி எலும்பு ஓடஞ்சி மூலையில தான் கெடக்கணும்!

வக்கீலின் மனைவி

இந்த பாரு உன்னோட புளுகு மூட்டையெல்லாம் கோர்ட்டுல வெச்சிக்க எங்கிட்ட வேண்டாம்!

வேலை இல்லாதவனின் மனைவி

சும்மா வடிச்சி வடிச்சி கொட்ட முடியாது எங்கயாவது போயி ரோடு மேய வேண்டியது தான!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.