Sitting Long Hours: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா? உஷார்.. இந்த 10 நோய் பாதிப்புகள் ஏற்படலாம்
Effects of Sitting Long Hours: அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டில் ஒர்க் பிரம் ஹோம் செய்தாலோ, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் சிறிய நடையை நடக்க வேண்டும். இதை தவிர்த்து மணிக்கணக்கில் உட்கார்ந்தபடியே இருந்தால் உங்களுக்கு கடுமையான நோய்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் உடல் உழைப்பை கொட்டுவதை காட்டிலும் உட்கார்ந்தவாறே கணிணி, லேப்டாப்களில் செய்யும் வேலைதான் பலரும் பார்த்து வருகிறார்கள். இந்த வேலைகளை வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்திலோ நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு செய்யும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் ஒரு நாளில் மணிக்கணக்கில் அசையாமல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு நீங்கள் செய்யும் வேலை உங்களது உற்பத்தித்திறனை அதிகரித்தாலும், உங்களின் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையிலான சமநிலையை பலவீனப்படுத்துவதோடு, நமது உடல், மனம் மற்றும் ஆன்மாவை பலவீனம் அடைய செய்கின்றன.
நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தோ அல்லது ஒரே இடத்திலே அமர்ந்தவாறோ வேலை செய்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் தீங்குகள் பற்றியும், பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு வேலை செய்வதால் நோய் பாதிப்புகளை பார்க்கலாம்
மனநல பிரச்னை
அசையாமல் நீண்ட நேரம் வேலை செய்வது மன ரீதியாக சோர்வடையலாம். உங்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாது. எந்த தெளிவான முடிவுகளையும் எடுக்க முடியாது. நீண்ட நேரம் இப்படி இருப்பது மன பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற கடுமையான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இது பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம், சோர்வை ஏற்படுத்துகிறது
தூக்கத்தில் கோளாறு
நீண்ட நேரம் வேலை செய்வது தூக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மையை அதிகரிக்கும். பகலில் சோர்வை ஏற்படுத்தி, தூக்கம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்ந்தால், நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடலாம்.
இதய நோய் பாதிப்பு
நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்வது இதய நோய்கள் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனுடன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடல் செயல்பாடு இல்லாததால் இதயம் தொடர்பான பல பிரச்னைகள் ஏற்படுத்தும்.
மூட்டு பிரச்னை
ஒரே இடத்தில் நகராமல் நீண்ட நேரம் வேலை செய்வது தசைகள் மற்றும் மூட்டுகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். முதுகுவலி மற்றும் கழுத்து வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
செரிமான பிரச்னை
அசையாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி, புண்கள் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் காரணமாக, உங்கள் உணவை சரியாக சாப்பிட முடியாது.
மனநிலை மாற்றங்கள்
நீண்ட நேரம் வேலை செய்வது உங்கள் மனநிலையை மோசமாக பாதிக்கிறது. நீங்கள் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்றாட வாழ்க்கையை சீர்குலைவை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோய்
நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடல் செயல்பாடு இல்லாதது நீரிழிவு நோயின் தொடக்கத்தை துரிதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
இனப்பெருக்க பிரச்னைகள்
கருவுறுதலில் பிரச்னைகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு கருச்சிதைவு அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகளை ஏற்படுத்தலாம். ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக, ஆண்களுக்கு இனப்பெருக்க பிரச்னைகளை அதிகரிக்கும்.
வயதான தோற்றத்தை ஏற்படுத்துவது
நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்தில் சருமத்தை வறட்சி ஏற்பட்டு விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். தலைமுடி நரைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் வயதான செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது.
குறிப்பு: ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்பையில் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் தகவல் மட்டுமே. மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்று இல்லை. உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்