Morning Quotes : இதயத்துக்கு இதமான 9 உணவுகள் இவைதான்! தினம் எடுத்துக்கொள்ள இரும்பாகும் இதயம்! கரும்பாகும் வாழ்க்கை!
இதயத்துக்கு இதமான உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இதயத்துக்கு இதமளிக்கும் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை தினமும் எடுத்துக்கொண்டால் இதயம் இரும்பாகும். இதயத்தை இரும்பாக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்னவென்று பாருங்கள். இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மிகவும் நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தும். கெட்ட ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு உதவக்கூடியது.
பெரிகள்
பெரிகள் என்றால் ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இவை உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
தக்காளி
தக்காளியில் லைக்கோபென் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உங்கள் உடலில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தை பராமரிக்க தக்காளி மிகவும் முக்கிய உணவாகும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்களில் அதிகளவில் ஃப்ளாவனாய்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் இதயும் மிதமான அளவு எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே இதயத்துக்கு இதமான உணவாகவும், உங்களுக்கு மகிழ்ச்சியை மேலும் வழங்கக்கூடிய ஒன்றாகவும் டார்க் சாக்லேட்கள் இருக்கும்.
பீன்ஸ்
சோயா, கொண்டடைக்கடலை மற்றும் அனைத்து வகை பீன்ஸ்களிலும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கின்றன. இது உங்கள் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த அழுத்தத்தை சரியான முறையில் பராமரிக்கிறது.
கீரைகள்
கீரைகளில் குறிப்பாக பாலக்கீரை, காலே போன்றவற்றில், அதிகளவில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இது உங்கள் இதயத்துக்க நன்மை தரும். இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது இதய நோய்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது.
நட்ஸ்
நட்ஸ்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. பாதாம், வால்நட்கள், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ்களில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைக்கிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை நட்ஸ்கள் குறைக்கிறது.
சால்மன்
சால்மனில் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைட்களை போக்குகிறது. இதனால் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் கொழுப்பு ஏற்படக்கூடிய ரத்த ஓட்டம் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. மேலும் ப்ளேகுகள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் தமனிகளை காத்து, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
அவகேடோ
அவகேடோக்களில் மேனோ சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இது உங்களின் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. எனவே இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் இதயத்துக்கு இதமான உணவாகும்.
தொடர்புடையை செய்திகள்