காலையில் இந்த 10 பழக்கங்கள் போதும்! உங்கள் பணியின் திறன் அதிகரிக்கும்; கவனம் கூடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலையில் இந்த 10 பழக்கங்கள் போதும்! உங்கள் பணியின் திறன் அதிகரிக்கும்; கவனம் கூடும்!

காலையில் இந்த 10 பழக்கங்கள் போதும்! உங்கள் பணியின் திறன் அதிகரிக்கும்; கவனம் கூடும்!

Priyadarshini R HT Tamil
Dec 31, 2024 06:00 AM IST

உங்கள் பணித்திறனையும், கவனத்தையும் அதிகரிக்கும் அதிககாலைப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

காலையில் இந்த 10 பழக்கங்கள் போதும்! உங்கள் பணியின் திறன் அதிகரிக்கும்; கவனம் கூடும்!
காலையில் இந்த 10 பழக்கங்கள் போதும்! உங்கள் பணியின் திறன் அதிகரிக்கும்; கவனம் கூடும்!

சில நிமிடங்களுக்கு தியானம் செய்யுங்கள்

உங்கள் நாளை ஒரு மன நிறைவுடன் துவங்குங்கள். தியானம் உங்கள் மனதை அமைதியடையச் செய்யும். உங்களின் பயத்தைக் குறைக்கும். உங்களின் கவனத்தை ஷார்ப்பாக்கும். தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் இதை நீங்கள் செய்தால் போதும், உங்களில் திறன் அதிகரிக்கும். உங்களின் கவனிக்கும் திறன் மேம்படும். நீங்கள் நாள் முழுவதும் அழுத்தமின்றி இருக்ககலாம்.

காலையிலே ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டு உட்காராதீர்கள்

காலையில் எழுந்தவுடனே உங்களுக்கு வந்து குவிந்துள்ள வாட்ஸ் அப் தகவல்கள் மற்றும் மெயில்களை செக் செய்துகொண்டு இருக்காதீர்கள். அதை செய்யத் தோன்றினாலும், அந்த ஆவலை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். மாறாக உங்கள் நாளை நேர்மறையாக மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இது உங்களின் முழு நாளுக்கும் உதவும். ஒரு புதிய நாளில் நீங்கள் தெளிவான மற்றும் குழப்பமற்ற மனநிலையில் செல்ல உதவும்.

எந்த சூழலிலும் அதிகாலையில் விழிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்

அதிகாலையில் நீங்கள் எழுகூது உங்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. உங்களால் பரபரப்பின்ற, அமைதியாக அந்த நாளை துவக்க உதவுகிறது. இந்த கூடுதல் நேரம் உங்களுக்கு என்று சில மணி நேரங்களை எடுத்துக்கொள்ள உதவுகிறது. திட்டமிடல் மற்றும் உடற்பயிற்சி செய்யவும் வழிவகுக்கிறது. இது உங்களை நாள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வைக்கிறது. கவனத்துடன் செயல்படவும் வைக்கிறது.

உள்ளங்கைகளை தேய்த்து உங்கள் முகத்தில் வைத்து இதமாகுங்கள்

உங்கள் உள்ளங்கைகளை தொடர்ந்து சில நிமிடங்கள் தேய்த்தால் அதில் ஒரு இதமான சூடு பரவும். அதை அப்படியே முகத்தில் வையுங்கள். இது உங்களின் ஆற்றலை தூண்டும். இது உங்கள் முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் மனத்தெளிவை உருவாக்கும். இந்த சிறிய பழக்கம், உங்கள் உணர்வுகளுக்கு புத்துணர்வூட்டும். உங்கள் முகத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன் நீங்கள் துவங்க வழிவகுக்கும்.

காலையில் படியுங்கள்

காலையில் எதையாவது படிக்கவேண்டும். குறிப்பாக செய்தித்தாள் படியுங்கள். அன்றைய நாளில் நடந்தவற்றை தெரிந்துகொள்ளுங்கள். செய்தி அல்லது கல்வி தகவல்களை கேளுங்கள். இந்தப்பழக்கம் உங்கள் மூளையைத் தூண்டி, உங்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும். இது உங்கள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கும். உங்கள் வேலைகளுக்குத் தேவையான கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்க்கிறது.

காலையில் குளிர்ந்து காற்று வாங்குங்கள், சூரியனில் குளியுங்கள்

காலையில் வெளியே சென்று ஃபிரஷ்ஷான காற்று வாங்குங்கள். மேலும் காலை சூரிய ஒளியில் நீங்கள் குளிப்பது உங்கள் உடலில் காலையிலேயே ஆன்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்களின் மனநிலையை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலில் வைட்டமின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது உங்களின் நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடலின் சிர்கார்டியன் ரிதம், அதாவது உறக்கம்-விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிறது. மேலும் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பசில்கள் மற்றும் மூளை விளையாட்டுக்களை விளையாடுங்கள்

நீங்கள் மூளைக்கு பயிற்சி தரும் வகையில் பசில்கள் மற்றும் விளையாட்டுகளை விளையாடுங்கள். காலையிலேயே இதைச் செய்வதால் உங்களில் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும். உங்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது. உங்கள் மூளையை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வைக்கிறது. உங்கள் மூளையைத் தூண்டுகிறது. உங்களின் கவனத்தை மேம்படுத்துகிறது. உங்களுக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறது. சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுக்கிறது. நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது.

காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தை எழுந்தவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது உங்கள் உடலில் உறக்கத்தின்போது குறைந்திருக்கும் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது. மூளையின் செயல்களை அதிகரிக்க நீங்கள் உங்கள் உடலில் போதிய நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இது உங்களின் மனநிலையை மேம்படுத்துகிறது. எச்சரிக்கை உணர்வையும் அதிகரிக்கிறது. இது உங்களுக்கு நன்றாக கவனிக்கவும், நன்றாக வேலைகளை செய்யவும் அடித்தளம் அமைக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.