அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை; மாறாக கொடுக்கலாம்! இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி?
அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கேட்கத் தேவையில்லை, மாறாக அவர்களுக்கு புதிதாக பறித்துக்கொடுக்கலாம். இஞ்சியை வீட்டில் வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சி வேரில் முளைக்கும் ஒன்றாகும். இது புத்துணர்ச்சியுடன், கடும் கார சுவை கொண்டதாக இருக்கும். இது பல டிஷ்களில் பயன்படுத்தப்படுகிறது. கிரேவிகள், வறுவல், சாலட்கள், ஸ்மூத்தி என பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான வலுவான குணங்கள் உள்ளது. இதை சாப்பிடும்போது செரிமானம் நல்ல முறையில் நடக்கும். இது வீட்டில் வளர்க்க சரியான தேர்வு ஆகும். இஞ்சி, ஆசியாவின் வெப்பமண்டல மற்றுது துணைவெப்ப மண்டல காடுகளை பிறப்பிடமாகக் கொண்டது. இஞ்சிக்கு இதமான சூழல் தேவை. இதை நீங்கள் வெப்பத்தில் வைக்கவேண்டும். இதற்கு கொஞ்சம் நிழழும் தேவைப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் கோடைக்க காலங்களில், அதை கொஞ்சம் நிழழுக்கு மாற்றிவைக்கவேண்டும்.
வீட்டில் இஞ்சி வளர்ப்பது எப்படி?
இஞ்சியை அதன் வேறுடன் கடைகளில் வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த வேர்களை நன்றாக உற்றுப்பாருங்கள். தண்டு பிடித்து வளர ஏற்றதா என்பதை உறுதிப்படுத்திக்காண்டு, ஒரு டிரேயில், ஆர்கானிக் உரம் கலந்த மண்ணை நிரப்பி இஞ்சியை முழுமையாக அதற்குள் புதைத்து வெப்பமான இடத்தில் 6 வாரங்களுக்கு வைக்கவேண்டும். அது வளர்ந்து வரத்துவங்கும்போது, மற்றொரு தொட்டிக்கு மாற்றவேண்டும். அதன் மீது இயற்கை உரங்கள் தூவி, தண்ணீர் தெளிக்க வேண்டும். இதை சில காலம் கழித்து நீங்கள் அறுவடை செய்துகொள்ளலாம்.
இஞ்சியை எங்கு வளர்க்கவேண்டும்?
வெப்பமான எந்த இடத்தில் வேண்டுமானாலும் இஞ்சியை வளர்க்கலாம். பனியில்லாத இடத்தில் வளர்க்கலாம். பசுமைக்குடில் அமைத்தும் வளர்க்கலாம்.