‘செய்கூலியும் இல்லை; சேதாரமும் இல்லை; கோலார் சட்னி இது; கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘செய்கூலியும் இல்லை; சேதாரமும் இல்லை; கோலார் சட்னி இது; கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி?

‘செய்கூலியும் இல்லை; சேதாரமும் இல்லை; கோலார் சட்னி இது; கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Oct 31, 2024 04:54 PM IST

செய்கூலியும் இல்லை, சேதாரமும் இல்லை, கோலார் சட்னிதான் இது. கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

‘செய்கூலியும் இல்லை; சேதாரமும் இல்லை; கோலார் சட்னி இது; கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி?
‘செய்கூலியும் இல்லை; சேதாரமும் இல்லை; கோலார் சட்னி இது; கர்நாடகா ரெசிபியை செய்வது எப்படி?

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது வைரலாக ஒரு சட்னி ரெசிபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. அந்தச் சட்னியை இட்லி, சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், ரொட்டி, நாண் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

வேர்க்கடலை – 2 ஸ்பூன்

பூண்டு – 10 பல்

தக்காளி – 1

சீரகம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

வர மிளகாய் – 5 முதல் 7

புளி – சிறிதளவு

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் -ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடலை பருப்பு, வேர்க்கடைலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். எஞ்சிய எண்ணெயில் பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.

அடுத்து, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து புளி சேர்த்து வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், அடுப்பை அணைத்து விடவேண்டும். வதக்கியவற்றை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது கல் உப்பை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். உப்பு சரிபார்த்து இறக்கினால், சூப்பர் சுவையான கோலார் சட்னி தயார்.

இது வழக்கமான சுவையில் இல்லாமல் வித்யாசமான சுவையில் இருக்கும். இதில் சேர்க்கப்படும் உளுந்து மற்றும் வேர்க்கடலை அதற்கு காரணம். இதை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பூரி, சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். தீபாவளியையொட்டி, எண்ணற்ற பலகார ரெசிபிக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். இனிய, பாதுகாப்பான, ஆரோக்கியமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.