Eggs: ’முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா?’ எப்படி சேமித்தால் நீண்டநாட்கள் வரும்! இதோ முழு விவரம்!
”முட்டையில் உள்ள அதன் ஓட்டின் மீது சால்மோனல்லா என்று சொல்லக்கூடிய நமக்கு வயிறு உபாதைகளை ஏற்படுத்த கூடிய கிருமிகள் இயற்கையாகவே உள்ளது என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்”

பொதுவாகவே ஒரு உணவுப்பொருளை கெட்டுப்போகாமல் இருப்பதற்காகத்தான் ஃபிரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் முட்டை இயற்கையாக கெட்டுப்போக வாய்ப்பு உள்ளதா என்றால் முட்டையில் உள்ள அதன் ஓட்டின் மீது சால்மோனல்லா என்று சொல்லக்கூடிய நமக்கு வயிறு உபாதைகளை ஏற்படுத்த கூடிய கிருமிகள் இயற்கையாகவே உள்ளது என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
அறை வெப்ப நிலையில் முட்டையை வைத்துக் கொண்டு இருக்கும் போது அதன் வாழ்நாள் ஒன்று முதல் 2 வாரங்கள் ஆகும். அதற்கு மேல் முட்டை இருந்தால் பெரும்பாலும் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆனால் முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் அதன் வாழ்நாள் நீடிக்குமா என்றால், ஆமாம் என்பதுதான் பதிலாக உள்ளது. ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐக்கிய அமெரிக்க உணவு பாதுகாப்பு கழகம் நடத்திய ஆய்வில் முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதன் வாழ்நாள் 4 முதல் 5 வார காலம் அதிகமாகிறது என தெரிய வந்து உள்ளது.
