Emotional Intelligence: ’AI தெரியும்! EI தெரியுமா?’ ஜிரோவை ஹீரோ ஆக்கும் எமோஷினல் இண்டெலிஜன்ஸ்!
”Emotional Intelligence: சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு உள்ளிட்ட பல திறன்களை உள்ளடக்கியது. எமோசனல் இண்டெலிஜென்ஸ் கொண்ட நபர்களால் உயர் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட முடியும்”

எமோசனல் இண்டெலிஜென்ஸ்-Emotional Intelligence
எமோசனல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் உணர்ச்சி நுண்ணறிவு (EI) மனித தொடர்புகளின் சிக்கல்களை வழிநடத்துவதிலும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எமோசனல் இண்டெலிஜென்ஸ் (EI) என்றால் என்ன?
எமோசனல் இண்டெலிஜென்ஸ் என்பது நமது சொந்த உணர்ச்சிகளையும், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், நிர்வகிக்க கூடிய திறனைக் குறிக்கிறது.
சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு உள்ளிட்ட பல திறன்களை உள்ளடக்கியது. எமோசனல் இண்டெலிஜென்ஸ் கொண்ட நபர்களால் உயர் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட முடியும்.
