தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  The Male Health Alert: Top 10 Symptoms Of Impotence You Shouldn't Ignore

Male Health Alert: ’இந்த பிரச்னைகள் உங்களுக்கு உள்ளதா?’ ஆண்மை குறைவுக்கான அறிகுறியாக இருக்கலாம்!

Kathiravan V HT Tamil
Jan 23, 2024 12:08 PM IST

”உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, வாழ்வியல் முறையில் மாற்றம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்”

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள்
ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆண்மைக்குறைவின் அறிகுறிகள்:-

விறைப்புத்தன்மை அடைவதில் சிரமம்

ஆண்மைகுறைவுக்கான பொதுவான மற்றும் வெளிப்படையான அறிகுறி பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான விறைப்புத்தன்மையை அடைய அல்லது பராமரிக்க இயலாமை ஆகும்.

பாலியல் செயல்பாடுகளில் ஆர்வமின்மை

லிபிடோ அல்லது பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது ஆண்மை குறைவுக்கான முக்கிய அறிகுறையாக உள்ளது. 

முன்கூட்டிய விந்து வெளியேறுதல் 

உடலுறவுக்கு முன்னரோ அல்லது ஓரளவுக்கு விறைப்புத்தன்மை பெற்ற சிறிது நேரத்திலோ முன்கூட்டிய விந்து வெளியேறுதல். 

தாமதமான விந்து வெளியேற்றம் 

போதுமான பாலியல் தூண்டுதல் இருந்தபோதிலும் உச்சக்கட்டத்தை அடைவதில் சிரமம் இருப்பது ஆண்மை குறைவின் அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  

அதிகாலையில் விறைப்புத்தன்மை இல்லாமை

அதிகாலையில் ஆண்குறி விறைப்பு அடைவது ஆண்களுக்கு இயற்கையான நிகழ்வாகும். இந்த விறைப்புத்தன்மை இல்லாதது இரத்த ஓட்டம் அல்லது ஹார்மோன் சமநிலையில் ஒரு சிக்கலைக் குறிக்கலாம்.

மென்மையான விறைப்புத்தன்மை

திருப்திகரமான பாலியல் செயல்பாடுகளுக்கு போதுமான உறுதியற்ற விறைப்புத்தன்மை ஆண்மைக்குறைவின் அறிகுறியாக இருக்கலாம்.

 உடலுறவின் போது வலி அல்லது அசௌகரியம் 

உடலுறவின் போது ஏற்படும் வலி உளவியல் ரீதியான பிரச்சனைகள் அல்லது ஆண்மைக்குறைவுக்கு பங்களிக்கும் அடிப்படை உடல் நிலைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. 

கவலை அல்லது மனச்சோர்வு

அதிக கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகள் ஆண்மைக்குறைவுக்கு காரணமாக அமையலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்