தினமும் உணவில் கட்டாயம் இந்த பழத்தின் சாறை சேர்க்கவேண்டும்! அதன் நன்மைகள் என்னவென பார்ப்போமா?
தினமும் உணவில் கட்டாயம் இந்த பழத்தின் சாறை சேர்க்கவேண்டும். அது என்ன பழம் என்றும் அதன் நன்மைகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் உணவில் கட்டாயம் ஒரு எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? எலுமிச்சை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. எலுமிச்சை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். அதன் சுவையால் அது பல உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இனிப்பு முதல் காரம் வரை அனைத்து வகை உணவுகளிலும் எலுமிச்சை பல்வேறு வழிகளில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் அதை சாலட்களில் பிழிந்து சாப்பிடலாம் அல்லது சூப்களில் சேர்த்து சாப்பிடலாம். கிரில் செய்யப்பட்ட உணவுகளில் பிழிந்து சாப்பிடலாம். எலுமிச்சை பழத்தின் சாறு எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது. அது உணவில் சுவையையும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் உணவில் எலுமிச்சை பழத்தை சேர்ப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் சி
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்புபு மண்டலத்தை உருவாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்களின் சரும ஆரோக்கியத்தையும், உங்கள் உடல் போதிய இரும்புச்சத்தையும் தாவர அடிப்படையிலான உணவில் இருந்து உறிஞ்சுவதையும் ஊக்குவிக்கிறது. உங்கள் உணவில் எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
எலுமிச்சை பழத்தின் சாற்றுக்கு செரிமான எண்சைம்களின் உற்பத்தியை தூண்டும் குணம் உள்ளது. உணவை உடைத்து, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழத்தின் சாற்றில் உள்ள அமிலங்கள் குடலில் உள்ள அமிலங்களை சமப்படுத்த உதவுகிறது. இது செரிமானமின்மையைத் குறைக்கிறது. வயிறு உப்புசத்தை உணவுடன் சேர்த்துக்கொள்ளும்போது குறைக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
எலுமிசையில் பெக்டின் உள்ளது. அது கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை நாள் முழுவதும் கொடுக்கிறது. எனவே உங்கள் உணவில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுவது, உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னர் எலுமிச்சை பழத்தின் சாற்றை பருகுவது, உங்களின் பசியைக் குறைக்கும், உங்களின் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்தும். உங்களுக்கு உடல் எடையை குறைப்ப உதவும். வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து நீங்கள் இடையில் சாப்பிடும் ஸ்னாக்ஸ்களில் அளவைக் குறைக்கும்.
உடலை ஆல்கலைஸ் செய்கிறது
எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலச்சுவை, உங்கள் உடல் வளர்சிதையடைந்தவுடன், அதை ஆல்கலைஸ் செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலில் அமிலத்தின் அளவை சமப்படுத்த உதவுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் சூழலை உருவாக்குகிறது. இது வீக்கத்தை குறைத்து, உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் சருமத்தை சரிசெய்யுவும், உங்கள் சருமத்தின் கொலாஜென் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. உங்கள் உணவில் எலுமிச்சையை சேர்த்துக்கொள்வது, உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் உங்கள் உடல் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.
கல்லீரலை சுத்திகரிக்கிறது
எலுமிச்சை பழத்தின் சாறு, உங்களுக்கு இயற்கை கழிவுநீக்கியாக செயல்படுகிறது. இது உங்கள் கல்லீரலின் இயக்கத்தைத் தூண்டுகிறது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றுகிறது. எனவே நீங்கள் எலுமிச்சை பழங்களை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இது உங்கள் உடலை இயற்கையாக தூய்மைப்படுத்தும் காரணியாகும். இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
கூடுதல் கலோரிகளை அதிகரிக்காமல் சுவையைக் மேம்படுத்துகிறது
எலுமிச்சை பழத்தின் சாறு உங்கள் நாவிற்கு சுவையைக் கொடுக்கிறது. இது உங்களின் கலோரிகள், கொழுப்பு அல்லது சர்க்கரையின் அளவை அதிகரிப்பதில்லை. இது உங்கள் சாலட்கள், கிரில்ட் காய்கறிகள் மற்றும் மீன் உணவுகளின் சுவையை இயற்கை முறையில் அதிகரித்து எளிய வழியாகும். இது ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உங்களின் உணவு சிறப்பானதாகிறது.
நீர்ச்சத்தை மேம்படுத்துகிறது
எலுமிச்சை பழத்தின் சாற்றை தண்ணீர் அல்லது உணவில் கலந்து சாப்பிடுவது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக வெறும் தண்ணீரை பருகுவதை வெறுப்பவர்கள், அதில் சில சொட்டுகள் எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து பருகலாம். இது அவர்களுக்கு புத்துணர்வைத்தரும். உடல் நீர்ச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்வதற்கும் உதவும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், உங்களின் ஆற்றல் அளவை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்