தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  The Exhausting Effects Of Blame In Relationships

Blame In Relationships : ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதைத் தவிர்ப்பது எப்படி?

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 03:16 PM IST

பொறுப்பை ஏற்றுக்கொள்வது முதல் முத்திரை குத்துவது தவிர்ப்பது வரை, உறவுகளை செழுமைப்படுத்தும் வழிகள் இங்கே..

ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதைத் தவிர்ப்பது எப்படி?
ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதைத் தவிர்ப்பது எப்படி? (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

பெரும்பாலும், ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது மனக்கசப்பிற்கு வழிவகுக்கும். இது நீண்ட காலத்திற்குத் தொடரும்போது, விரக்தியை உருவாக்கும். பிரிவினைக்கு வழிவகுக்கும். "பிரச்னைகளை சமாதானமாகப் பேசுவதற்குப் பதிலாக நாம் ஒருவர் மீது ஒருவர் பழிபோடும்போது அது சோர்வினை உண்டாக்கும்" என்று மனநல ஆலோசகர் பெஞ்சமின் எகோரி எழுதியுள்ளார்.

ரிலேஷன்ஷிப்பில் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதைத் தடுக்க செய்யவேண்டிய வழிகள் என்ன என்பது குறித்து மனநல ஆலோசகர் கூறுவது இதுதான்.

பழி போடுவது கோபத்தில் இருந்து வருகிறது: கவனிக்கப்படாத கோபம், நீண்ட கால மனக்கசப்பு ஆகியவை ரிலேஷன்ஷிப்பில் பழிபோடுவதற்கு வழிவகுக்கும். இது தற்காத்துக் கொள்ளும் எண்ணத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் தொடங்கச் செய்கிறது. ஆரோக்கியமாக உரையாடும் வரை இந்தப் பிரச்னை சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.

கடிதம் எழுதுங்கள்: ஒரு உறவில் பழி விளையாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஆரோக்கியமான வழிகளில் ஒன்று. நாம் உணர்ந்த உணர்ச்சிகளை எழுத்துப் பூர்வமாக தெரிவிப்பது அதாவது கடிதம் அனுப்புவது, மெயில் அனுப்புவது போன்ற செயல்பாடுகள்.இந்தச் செயல்பாடுகள் பழிபோடுதலைத் தடுக்கும்.

பொறுப்பை ஏற்றுக்கொள்வது: 

இந்த வேலையை நீயே செய் என நமது துணையிடம் சொல்லித் தப்பித்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக நமது செயல்களுக்கு பொறுப்பேற்கத் தொடங்க வேண்டும். நாம் யாரையாவது புண்படுத்தினால், அதற்கு என்ன காரணங்கள் இருந்தாலும், நாம் மன்னிப்புக் கேட்பேன் என வாக்குறுதி அளிக்க வேண்டும்.

முத்திரை குத்துவதைத் தவிர்க்கவும்: நடத்தை முறைகள் என்பவை சூழல் சார்ந்தவை. ஒருவர் சில நேரங்களில் தவறாக நடந்துகொள்ளும்போது, அவர் இப்படிப்பட்டவர் தான் என முத்திரை குத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இது உங்கள் ரிலேஷன்ஷிப்பிலும் முக்கியம் வாய்ந்தது. நேர்மறையான லேபிளிங் செய்வது, நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும். அதுவே, எதிர்மறையான விஷயங்களை வைத்து குற்றம்சாட்டுவது நல்லெண்ணத்தைக் கெடுத்துவிடும். 

குற்றம்பார்க்கின் சுற்றமில்லை: ஒருவர் மற்றொருவரிடம் குற்றத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தாலோ, பழிபோட்டுக்கொண்டே இருந்தாலோ ரிலேஷன்ஷிப்பில் ஒருபோதும் பாஸிட்டிவ் ஆன விசயங்களைப் பெறமுடியாது. இது உறவின் அடுத்தகட்டத்தைப் பாதிக்கும். அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே, பாஸிட்டிவ் ஆன விசயங்களை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்