Oil Pulling Benefits: ’வெண்மை பற்களும்! அழகிய சிரிப்பும் வேண்டுமா! ஆயில் புல்லிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?’
”ஆயில் புல்லிங் செயல்முறையானது காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில், தோராயமாக ஒரு தேக்கரண்டி எண்ணெயை வாயில் விட்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு, கொப்பளிப்பதன் மூலம் செய்யப்படுகிறது”

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
ஆயில் புல்லிங்கின் தோற்றம்:-
ஆயில் புல்லிங், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் வேர்களைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, நல்லெண்ணெய் மூலம் ஆயில் புல்லிங் செய்வது நன்மையை தரும் அதேவேளையில் தேங்காய், ஆலிவ் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களும் பிரபலமான தேர்வுகளாகும். இந்த நடைமுறையானது உடலை நச்சுத்தன்மையாக்குவதாகவும், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதாகவும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது.
ஆயில் புல்லிங் செய்வது எப்படி?
ஆயில் புல்லிங் செயல்முறையானது காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில், தோராயமாக ஒரு தேக்கரண்டி எண்ணெயை வாயில் விட்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு, கொப்பளிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
