Thattai : ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வேண்டுமா? சட்டுன்னு செஞ்சு, பிட்டு பிட்டு சாப்பிடலாம்! இத ட்ரை பன்னி பாருங்க!
Thattai : ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வேண்டுமா? சட்டுன்னு செஞ்சு, பிட்டு பிட்டு சாப்பிடலாம்! இத ட்ரை பன்னி பாருங்க!
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 2 கப்
கடலை பருப்பு – கால் கப்
கறிவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
உப்பு – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
எள்ளு – 2 ஸ்பூன்
பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் – 4 ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
மசாலா அரைக்க கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த கடலை பருப்பை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அரைத்த மசாலா விழுதையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகம், எள், பெருங்காய தூள் மற்றும் உப்பில்லாத வெண்ணெய் சேர்க்கவேண்டும்.
இவை அனைத்தையும் நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
அடுத்து சூடான கொதிக்கும் நீரை படிப்படியாக ஊற்றி மாவை தயார் செய்யவேண்டும். மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் பிசைந்த மாவை மூடி வைக்க வேண்டும்.
அகன்ற கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவேண்டும்.
ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறிய உருண்டையாக உருட்டி வைத்து, தண்ணீரில் கையை ஈரப்படுத்தி மெதுவாக அதை சமமாக அழுத்தி தட்டையாக வட்ட வடிவில் தட்டிக்கொள்ள வேண்டும்.
சூடான எண்ணெயில் சேர்த்து எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.
கடாயில் இருந்து எடுத்து ஆறவைக்கவேண்டும்.
அவை அனைத்தும் முழுவதுமாக குளிர்ந்தவுடன், காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதை 4-5 நாட்களுக்கு வைத்து பரிமாறலாம்.
இது தென்னிந்தியாவில் ஒரு ப்ரவலான ஸ்னாக்ஸ் ரெசிபி. இதிலிருந்து சாட் மற்றும் தட்டு வடை ஆகியவை செய்யலாம். அதற்கு குட்டி, குட்டி வட்டங்களாக தட்டிக்கொள்ள வேண்டும்.
இதற்கு முக்கியமான பொருள் அரிசிதான். இவை சுவைநிறைந்ததாக இருக்கும். இதில் வெங்காயம், பூண்டு சேர்க்கப்படுவதில்லை என்பதால், இதை விரத காலங்களில் இருப்பவர்களும் எடுத்துக்கொள்ளலாம். இது ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிட ஏற்றது. அதற்கு பொரித்து எடுத்தவுடன் ஆறவைத்து ஒரு காற்று புகாத, ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்துவிடுவது நல்லது.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்