தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thanjavur Tomato Chutney : தளதளன்னு இப்டி ஒரு தக்காளி சட்னி! வாழ்க்கையிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! இதோ ரெசிபி!

Thanjavur Tomato Chutney : தளதளன்னு இப்டி ஒரு தக்காளி சட்னி! வாழ்க்கையிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2024 10:00 AM IST

Thanjavur Tomato Chutney : தளதளன்னு இப்டி ஒரு தக்காளி சட்னியை வாழ்க்கையிலே சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதன் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Thanjavur Tomato Chutney : தளதளன்னு இப்டி ஒரு தக்காளி சட்னி! வாழ்க்கையிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! இதோ ரெசிபி!
Thanjavur Tomato Chutney : தளதளன்னு இப்டி ஒரு தக்காளி சட்னி! வாழ்க்கையிலே சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

தக்காளி – 3

பூண்டு – 35 பல்

வர மிளகாய் – 5

உப்பு – தேவையான அளவு

புளி – ஒரு சிறிய துண்டு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

தக்காளியை வடை குத்தும் குத்தியில் குத்தி, அடுப்பில் நேரடியாக சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். தோல் பகுதி கருகியிருக்கும் என்பதால், அதை நீக்கிவிடவேண்டும். உட்புறத்தை மட்டும் வெட்டிக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி பூண்டு, மிளகாயை வதக்கிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் உப்பு மற்றும் துண்டு புளியுடன் அரைத்துக்கொள்ளவேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவேண்டும்.

சுவை நிறைந்த இந்த தஞ்சாவூர் சுட்ட தக்காளி சட்னியை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வழக்கமாக சாப்பிடும் அளவைவிட அதிகமாக இட்லி, தோசைகள் காலியாகும். இட்லியைவிட தோசைக்கு இது ஒரு சிறந்த சைட்டிஷ் ஆகும். ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி சுவைக்க தூண்டும் இந்த தக்காளி சட்னியை கட்டாயம் முயற்சி செய்யுங்கள்.

இந்த சட்னி தஞ்சாவூர் பகுதிகளில் பிரபலமான ஒன்று. காரம் அதிகம் தேவைப்பட்டால் கூடுதலாக மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் நாம் பூண்டும் சேர்ப்பதால், வரமிளகாய் சேர்ப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

குறிப்புகள்

தக்காளி நல்ல பழுத்த தக்காளியாகவும், பூண்டு பழுதில்லாத நெத்து பூண்டாகவும் இருந்தால், இந்த சட்னி சுவை நிறைந்ததாக இருக்கும்.

இதை நாட்டுத்தக்காளியில்தான் கட்டாயம் செய்யவேண்டும். பெங்களூர் தக்காளியில் முயற்சித்துவிடாதீர்கள். சுவை நன்றாக இருக்காது.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

தக்காளி நாம் அன்றாட உணவில் சேர்ப்பதுதான் என்றாலும், அதன் நன்மை கருதி, அதை தினமுமே உணவில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.