Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!

Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Published Mar 01, 2024 11:02 AM IST

Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!

Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!
Thalapakatti Biriyani : தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி! வீட்டிலே செய்து அசத்தலாம்!

மட்டன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தயிர் – ஒரு கப்

மிளகாய்த்தூள் – 4 டேபிள் ஸ்பூன்

பட்டை சிறிது – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

எலுமிச்சை பழம் – 2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை -

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவேண்டும்.

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி வதங்கி கரைந்ததும், மட்டன் சேர்த்து வதக்கவேண்டும்.

நன்றாக வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவேண்டும்.

தண்ணீர் கொதிக்கும்போது ஊற வைத்த அரிசியைப் போடவவேண்டும்.

அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவேண்டும்.

அரிசி வெந்ததும், நெய் சேர்த்து கிளறி இறக்கவேண்டும்.

ரைத்தா, தாளிச்சாவுடன் பரிமாற சுவை அள்ளும். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு பிரியாணி. 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.