தாய் மாங்காய் சாலட் : கோடை காலத்துக்கு ஏற்ற தாய் ஸ்டைல் மாங்காய் சாலட்! இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தாய் மாங்காய் சாலட் : கோடை காலத்துக்கு ஏற்ற தாய் ஸ்டைல் மாங்காய் சாலட்! இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

தாய் மாங்காய் சாலட் : கோடை காலத்துக்கு ஏற்ற தாய் ஸ்டைல் மாங்காய் சாலட்! இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 23, 2025 12:25 PM IST

கோடை என்றால் அது மாங்காய் மற்றும் மாம்பழங்களின் சீசன்தான். தாய் ஸ்டைலில் ஒரு ஒரு சாலட் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தாய் மாங்காய் சாலட் : கோடை காலத்துக்கு ஏற்ற தாய் ஸ்டைல் மாங்காய் சாலட்!  இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!
தாய் மாங்காய் சாலட் : கோடை காலத்துக்கு ஏற்ற தாய் ஸ்டைல் மாங்காய் சாலட்!  இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• மாங்காய் – 1 (மேலே குறிப்பிட்டுள்ள பதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்)

• கேரட் – 1 (துருவியது)

• வறுத்து பொடித்த கடலை – கால் கப்

• பச்சை மிளகாய் – 1 (கீறியது)

• எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன்

• சர்க்கரை – ஒரு ஸ்பூன்

• சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. மாங்காய்கள், கேரட்கள், பச்சை மிளகாய்கள் மற்றும் பொடித்த கடலை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

2. அதில் எலுமிச்சை பழத்தின் சாறு, சோயா சாஸ் மற்றும் சர்க்கரை என அதையும் தூவி கலந்துவிடவேண்டும்.

3. இதை மல்லித்தழை தூவி அலங்கரிக்க வேண்டும்.

4. சூப்பர் சுவையான மாங்காய் சாலட் தயார்.

இது உங்களுக்கு புத்துணர்ச்சி தரும். இதை நீங்கள் சாப்பிட்டவுடன் அல்லது சாப்பிடுவதற்கு முன் சாலடாக சாப்பிடலாம் அல்லது காலை, மதிய உணவுக்கு இடையில் எடுத்துக்கொள்ளலாம். இது இனிப்பு, புளிப்பு கலந்த சூப்பர் சுவையானதாக இருக்கும். இந்த சாலட்டை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். கோடை இருக்கும்போதே நன்றாக சுவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சீசனில் கிடைக்கும் மாங்காய்களுக்குத்தான் சுவை அதிகம்.