தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Teeth Pain Simple Home Remedies To Cure Tooth Pain

Teeth Pain : சொத்தை பற்களால் ஏற்படும் வலியை குணப்படுத்தும் எளிய வீட்டு முறை வைத்தியம்!

Priyadarshini R HT Tamil
Jan 21, 2024 09:59 AM IST

Teeth Pain : சொத்தை பற்களால் ஏற்படும் வலியை குணப்படுத்தும் எளிய வீட்டு முறை வைத்தியம்!

Teeth Pain : சொத்தை பற்களால் ஏற்படும் வலியை குணப்படுத்தும் எளிய வீட்டு முறை வைத்தியம்!
Teeth Pain : சொத்தை பற்களால் ஏற்படும் வலியை குணப்படுத்தும் எளிய வீட்டு முறை வைத்தியம்!

ட்ரெண்டிங் செய்திகள்

சொத்தைப்பற்களால் ஏற்படக்கூடிய வலி, வீக்கம், ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் கூச்சம் போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் பற்களுக்குள் இருந்துகொண்டு பற்களுக்கு தொந்தரவு கொடுக்கும். 

அந்தக்கிருமிகளை இயற்கையான முறையில் சரிசெய்வது குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் பல் வலி குணமாகும். இது மிகவும் எளிய மருத்துவ குறிப்பு. கட்டாயம் முயன்று பாருங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும். பல் வலி ஏற்பட்டால் நம்மால் அதை கட்டாயம் தாங்கிக்கொள்ளவே முடியாது. 

தேவையான பொருட்கள்

மிளகு – அரை ஸ்பூன்

பூண்டு – 1

உப்பு – அரை ஸ்பூன்

புளி – 2 கொட்டை

நூல்

சுத்தமான வெள்ளை துணி சிறியது கட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பு – 1

அந்த சிறியளவு சதுரமாக வெட்டிய துணியில் 5 மிளகு, ஒரு பூண்டு, உப்பு ஒரு சிட்டிகை வைத்து அதை சிறிய உரல் வைத்து நன்றாக தட்டிக்கொள்ள வேண்டும். அதன் சாறுகள் நன்றாக இறங்க வேண்டும். அதை ஒரு சிறிய மூட்டை போல் உருட்டி ஒரு நூல் வைத்து கட்டிக்கொள்ள வேண்டும். எஞ்சிய துணியை நறுக்கிவிடவேண்டும்.

இதை சொத்தை பற்களுக்கு இடையில் வைக்க வேண்டும். எந்த இடத்தில் சொத்தை பல் உள்ளதோ அந்த இடத்தில் மூட்டையின் அடிப்பகுதி, சாறு நிறைந்த பகுதி இருக்க வேண்டும். சொத்தை பல் மேலே இருந்தால், அந்த மூட்டையின் அடிப்பகுதி மேற்புறம் நோக்கியும், கீழே இருந்தால் கீழ்புறம் நோக்கியும் இருக்க வேண்டும்.

இந்த மூட்டை சரியாக வைத்து பற்களை நன்றாக கடித்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்து சாறு வெளியே உமிழ்நீர் வெளியேறும், அதை துப்பிவிடவேண்டும். வைத்தவுடன் அதிகப்படியான உமிழ்நீர் வெளியேறும் அதை அவ்வப்போது துப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதே உங்களால் வலி குறைவதை உணர முடியும்.

பல்வலியை உடனடியாக சரிசெய்யும். சிறிது நேரத்தில் அந்த மூட்டையை அகற்றிவிடலாம். அதாவது சாறு இறங்கியவுடன் என்பதை அளவாகக்கொள்ளலாம். இரவில் உறங்கிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு தீடிரென பல்வலி ஏற்படும். அப்போது இந்த வீட்டு மருத்துவக்குறிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

குறிப்பு – 2

புளியை சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, உப்பில் நன்றாக தோய்த்து எடுத்து அதை சொத்தை பல்லின் மீது வைத்து அடக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அடக்கிக்கொள்ளும்போது உமிழ்நீர் வரும். அந்த உமிழ்நீரை கீழே துப்பிவிடவேண்டும். அதை விழுங்கிவிடக்கூடாது. 

உமிழ்நீரில் கிருமி வரும். கிருமியை விழுங்கிவிடக்கூடாது என்பதால்தான், உமிழ்நீரை துப்பவேண்டும். இது அந்த கிருமிகளை வெளியேற்றும். அந்த கிருமிகள் வெளியேற்றிவிட்டால், பல்லில் வலி ஏற்படாது. இதில் எந்த ஒரு குறிப்பும் உங்களுக்கு பலன் அளிக்கும்.

பிரச்னை பெரிதாக இருந்தால் மருத்துவரை அணுகுவதுதான் சரியான ஒன்றாகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்