தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tawa Potato Fry Tawa Potato Fry Its So Amazing That Its Gone As Soon As Its Done

Tawa Potato Fry : தவாஉருளைக்கிழங்கு வறுவல்! செய்து முடித்தவுடனே தீர்ந்துவிடும் சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 01:14 PM IST

Tawa Potato Fry : தவாஉருளைக்கிழங்கு வறுவல்! செய்து முடித்தவுடனே தீர்ந்துவிடும் சுவையில் அசத்தும்!

Tawa Potato Fry : தவாஉருளைக்கிழங்கு வறுவல்! செய்து முடித்தவுடனே தீர்ந்துவிடும் சுவையில் அசத்தும்!
Tawa Potato Fry : தவாஉருளைக்கிழங்கு வறுவல்! செய்து முடித்தவுடனே தீர்ந்துவிடும் சுவையில் அசத்தும்!

ட்ரெண்டிங் செய்திகள்

உருளைக்கிழங்கு – 2

சீரகம் – கால் ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

பூண்டு பற்கள் – 4

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி மெலிதான அரை வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் உப்பு கலந்த நீரில் 30 நிமிடங்கள் போட்டு வைக்கவேண்டும்.

பூண்டு பற்களை லேசாக இடித்துக் கொள்ளவேண்டும்.

ஒரு அகலமான கனமான பேனில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். பின் மெலிதாக நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு சேர்த்து வதக்கவேண்டும்.

உருளைக்கிழங்கோடு, உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கைவிடாமல் மிதமான சூட்டில் சிறிது நேரம் வதக்கவேண்டும்.

பின்னர் மூடி வைத்து தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அதன் சூட்டிலேயே வேகவிடவேண்டும். நடுவே திறந்து திருப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

உருளைக்கிழங்கு வெந்த பின் மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் முறுகலாகும் வரை வதக்கி இறக்கவேண்டும்.

பத்தே நிமிடத்தில் பக்காவான உருளைக்கிழங்கு வறுவல் தயார். சாம்பார், ரசம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் என எல்லா உணவுகளும் சூப்பர் சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இது இருக்கும்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்

உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் வழங்குகிறது. வைட்டமின் சி, பி6 மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகிறது. இது உங்கள் செரிமானத்துக்கு உதவக்கூடியது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அது கல்லீரல் மற்றும் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வெள்ளை உருளைக்கிழங்கைவிட கத்தரிப்பூ நிற உருளைக்கிழங்கில் 4 மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவி செய்கிறது. இது உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

173 கிராம் உருளைக்கிழங்கில், 161 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் புரதச்சத்து, 36.6 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, 28 சதவீதம் வைட்டமின் சி, 27 சதவீதம் வைட்டமின் பி6, 26 சதவீதம் பொட்டாசியம், 19 சதவீதம் மேங்கனீஸ், 12 சதவீதம் மெக்னீசியம், 12 சதவீதம் பாஸ்பரஸ், 12 சதவீதம் நியாசின், 12 சதவீதம் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்