அதிரி புதிரி அமர்க்களம் செய்யும் சன் டிவி சீரியல்கள்! டாப் 5 இல் கூட நுழையாத விஜய் டிவி! இந்த வார டிஆர்பி நிலவரம் என்ன?
இல்லத்தரசிகளுக்கு மட்டுமே சீரியல் என்ற நிலை மாறி வருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் சீரியல்களின் ரசிகர்களாக மாறி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இடத்தில் இவை உள்ளன.
இல்லத்தரசிகளுக்கு மட்டுமே சீரியல் என்ற நிலை மாறி வருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் சீரியல்களின் ரசிகர்களாக மாறி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இடத்தில் இவை உள்ளன. இயல்பாகவே நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் சீரியல்கள் இருப்பதால் அதன் கதைகள் இருப்பதாலும் மக்களை வெகுவாக கவர்கிறது.
சன் டிவி
90ஸ் கிட்ஸ் களுக்கு சீரியல் என்றாலே சன் டிவி தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சன் டிவியின் சீரியல்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் திடீரென சன் டிவி சீரியல் சரிவை கண்டது. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய டிவிகளின் சீரியல்கள் டாப் இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையை சரி கட்ட சன் டிவி அதிரடியாக பல சீரியல்களை களம் இறக்கியது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை நேர படங்களை தவிர்த்து மூன்று மணி தொடர் சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு செய்த விளைவின் காரணமாக தற்போது சன் டிவியே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் டாப் 110 இடங்களில் முதல் டாப் இடங்களை சன் டிவி சீரியல்களை பெற்றுள்ளன.
டாப் 5 இல் சன் டிவி தான்
சன் டிவியில் முதலிடத்தில் கயல் சீரியலே இருந்து வருகிறது. நடிகை சித்தாரா மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் இந்து தொடரில் கயல் மற்றும் அவர்களின் குடும்பத்தை பழி தீர்க்கும் எதிரிகளுக்கு மத்தியில் கயல் எவ்வாறு தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை சூழலாக வைத்து அமைந்துள்ளது. இந்த வார இறுதியில் 9.95 என்ற புள்ளியைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முதல் இடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் 9. 92 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், மருமகள் சீரியல் 8. 95 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதனை அடுத்து மூன்று முடிச்சு சீரியல் 9.63 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திலும், ராமாயணம் சீரியல் 8.65 கலை பெற்று ஐந்தாவது இடத்திலும், அன்னம் சீரியல் 8.58 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அன்னம் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் முதல் ஆறு இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் டாப் சீரியலான சிறகடிக்க ஆசை 7.65 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்தில் உள்ளது. முன்னதாக விஜய் டிவிக்கு அதிக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்