தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tamil Scientist Invents Diabetes Control Strips

diabetes control- நீரிழிவு நோயாளிகளின் உயிர்காக்க தமிழர் தந்த பரிசு

I Jayachandran HT Tamil
Dec 03, 2022 10:26 PM IST

நாட்டில் 65 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஒரு தமிழர் உருவாக்கியுள்ளார்.

விஞ்ஞானி சரத் ஸ்ரீராம்
விஞ்ஞானி சரத் ஸ்ரீராம்

ட்ரெண்டிங் செய்திகள்

* நீரிழிவு - உடலில் சர்க்கரையின் அளவு கூடுவதால் ஏற்படும் விளைவை டயாபடீஸ் அல்லது நீரிழிவு நோய் என அழைக்கிறோம்.

* உண்மையில் இது ஒரு குறைபாடு என்றாலும் கூட இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய வியாதியாக இது உருவாகியுள்ளது.

* 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 463 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில், சுமார் 8.8 சதவீதம்.

* பெரும்பாலும் நீரிழிவு நோயைக் கண்டறிய, உலகம் முழுவதும், ரத்தத்தை சோதனை செய்யும் முறையே பயன்பாட்டிலிருந்து வருகிறது.

* வீட்டிலேயே நீரிழிவு நோயைக் கண்டறிய பயன்படுத்தப்படும், எளிய இயந்திரங்களிலும் கூட ரத்தத்தை ஊசியால் குத்தி எடுத்து அதைக்கொண்டே சோதனை செய்ய வேண்டியுள்ளது.

* இதனால் வலி, உட்பட பல்வேறு உப பிரச்சனைகள் வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர்.

* இந்தக் குழுவில் முக்கிய பங்காற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரத் ஸ்ரீராம். சென்னையில் பிறந்து, திருச்சியில் வளர்ந்து, கோவையில் படித்து, தற்போது ஆஸ்திரேலியாவில் பயணியாற்றி வருகிறார் சரத்.

* அவரது கண்டுபிடிப்புமூலம், வெல்குரோ போன்ற பட்டை ஒன்றை உடலில் ஒட்டிவிட்டாலே போதுமானது. அதில் அமைக்கப்பட்டுள்ள சென்சார்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை துல்லியமாகக் கண்டுபிடித்துவிடும் என்கிறார் சரத்.

* சமீப காலமாக, சிறு குழந்தைகளும் கூட, சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், சரத் மற்றும் அவரது குழுவின் கண்டுபிடிப்பு, பேருதவியாக இருக்கப்போகிறது என்கிறது மருத்துவ உலகம்.

* ரத்தத்தை கண்டு அஞ்சும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி சோதனை செய்வதின் மூலம் உளவியல் ரீதியாகவும், அவர்கள் விரைந்து குணமடைய வாய்ப்பு உருவாகும் என்கிறார் சரத்.

* இந்த பட்டையை கரோனா நோயை கண்டறியவும், பயன்படுத்த முடியும் என்பது அதன் தனிச்சிறப்பாகும்.

* நோய் நாடி குணம் நாடுதல் என்று வரும்போது, சரத்தின் இந்தக் கண்டுபிடிப்பு, நடைமுறைக்கு வரும்போது, இது ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பெரும் வரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 

WhatsApp channel