தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி; எப்படி செய்வது என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி; எப்படி செய்வது என்று பாருங்கள்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி; எப்படி செய்வது என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Apr 14, 2025 05:00 AM IST

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : இதை தமிழ் புத்தாண்டன்று உங்கள் வீடுகளில் செய்து அனைவரும் சாப்பிட்டு மகிழ ஏதுவாக அதை எப்படி செய்வது என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு, செய்து, சாப்பிட்டு தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி; எப்படி செய்வது என்று பாருங்கள்!
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் வேப்பம் பூ பச்சடி; எப்படி செய்வது என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• காய்ந்த வேப்பம் பூக்கள் – ஒரு டேபிள் ஸ்பூன்

• புளிக்கரைசல் – ஒரு கப்

• வெல்லம் பொடித்தது – அரை கப்

• ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

• உப்பு – தேவையான அளவு

• அரிசி மாவு – கால் ஸ்பூன்

• தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் அல்லது நெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 1 (கீறியது)

செய்முறை

1. அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி பேஸ்டாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு சேர்த்து பொரிந்தவுடன் பச்சை மிளகாயை சேர்த்து தாளிக்க வேண்டும்.

4. அதில் காய்ந்த வேப்பம்பூவைச் சேர்த்து குறைவான தீயில் வறுக்கவேண்டும். இதை வறுக்கும்போது கவனம் தேவை. வேப்பம் பூ கருகிவிடக்கூடாது. தீயை நன்றாக குறைத்துவிடவேண்டும்.

5. அடுத்து புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவேண்டும். ஒவ்வொரு முறையும் வேப்பம் பூக்கள் கருகிவிடக்கூடாது. அடுப்பை குறைவான தீயிலே வைத்துக்கொள்ளவேண்டும்.

6. அடுத்து வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தேவையான அளவு உப்பையும் தூவிக்கொள்ளவேண்டும்.

7. கடைசியாக கரைத்து வைத்துள்ள அரிசி பேஸ்ட்டை சேர்த்தால் பச்சடி கெட்டியாகும்.

8. சூப்பர் சுவையான இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவையும் கலந்த வேப்பம்பூ பச்சடி தயார்.

இதை தமிழ் புத்தாண்டு அன்று வீடுகளில் செய்து சாப்பிடவேண்டும். அறுசுவையும் கலந்த உணவு உண்டு புத்தாண்டை வரவேற்கவேண்டும். இந்தப் புத்தாண்டுக்கு இந்த ரெசிபியை செய்து சாப்பிட்டு, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

குறிப்புகள்

• அரிசி மாவு உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.

• தண்ணீரை உங்களுக்கு தேவையான அளவு கலந்துகொள்ளவேண்டும். கெட்டியாக வேண்டுமென்றால் தண்ணீரைக் குறைவாகவும், தண்ணீராக வேண்டுமென்றால் தண்ணீர் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

• புளிக்கரைசலுக்குப் பதில் புளி பேஸ்டை பயன்படுத்தலாம். ஒரு கப் தண்ணீரில் அதை கரைத்துக்கொள்ளலாம்.

• வெல்லத்தையும் அப்படியே நேரடியாகவும் சேர்த்துக்கொள்ளலாம். அதை பொடித்து அதில் இருந்து பாகு எடுக்கவேண்டிய தேவையில்லை.

• ஆனால் இந்த பாகுக்கு பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்து அதை வடிகட்டிக்கொண்டாலே போதும். அதில் உள்ள தூசிக்களை நீக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதை கரைத்து பயன்படுத்தவேண்டும்.

• உங்களுக்கு தேவையான அளவு இனிப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

• காய்ந்த வேப்பம் பூக்கள் அல்லது புதிதாக மலர்ந்த பூக்கள் என இரண்டையும் பயன்படுத்தலாம். 

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.