Kadi Joke : ‘ராமு.. சொல்லுடா சோமு..’ சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க! இன்றைய கடி ஜோக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke : ‘ராமு.. சொல்லுடா சோமு..’ சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க! இன்றைய கடி ஜோக்ஸ்!

Kadi Joke : ‘ராமு.. சொல்லுடா சோமு..’ சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க! இன்றைய கடி ஜோக்ஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 21, 2025 10:35 PM IST

இன்றைய நாளில் உங்களை மகிழ்விக்க சில மொக்கை என்கிற கடி ஜோக்குகள் சிலவற்றை வழங்குகிறோம். இது இன்றைய சீரியஸான உங்கள் நாளை, சிரிப்பான நாளாக மாற்றலாம். சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க!

Kadi Joke : ‘ராமு.. சொல்லுடா சோமு..’ சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க! இன்றைய கடி ஜோக்ஸ்!
Kadi Joke : ‘ராமு.. சொல்லுடா சோமு..’ சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க! இன்றைய கடி ஜோக்ஸ்!

காய்‘கடி’

ராமு: பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது ஏன்?

சோமு: ஏன்னா.. அது சிவப்பா இருக்கும்..!

சில்லரை பய

ராமு: எதுக்கு அந்த ஆளை அடிச்ச?

சோமு: ஒரு காயினை காட்டி, நான் நாணயமானவன்னு சொன்னேன்!

ராமு: அதுல என்ன பிரச்னை?

சோமு: அதுக்கு அவன், நீ நாணயம் இல்ல, சில்லரைனு சொல்றான்!

பயங்கரமான ஆளு

ராமு: உன் பொண்டாட்டியும், அம்மாவும் சண்டை போட்டா நீ யார் பக்கம்?

சோமு: யார் ஜெயிச்சாலும், எப்பவும் தெரு பக்கம் தான்!

‘கிளி’ மாதிரி மனைவி

ராமு: கிளி மாதிரி பொண்டாட்டி கிடச்சிருக்கானு சொன்னா.. டெய்லி கையில கட்டுப் போட்டு வர்ற?

சோமு: அவ கிளி தான்.. ஆனா வெட்டுக் கிளி.. டெய்லி கையை வெட்டிடுறா!

காயமான காதல்

ராமு: ஏண்டா சோகமா இருக்க?

சோமு: முதல் முறை என் காதலி எனக்காக கையில சூடு வெச்சிருக்கா!

ராமு: நீ கொடுத்து வெச்சவன்டா

சோமு: அடப்போடா.. ஏற்கனவே அவ கையில 5 சூடு தழும்பு இருக்கு!

பயங்கரமான மனைவி தான்

ராமு: டேய்.. பொண்டாட்டி பயங்கர டிவி பைத்தியமா இருக்காடா!

சோமு: அப்படி என்ன பண்றா?

ராமு: கரெண்ட் போனாலும் டார்ச் அடிச்சு பாக்குறாடா!

நல்லவேள அதோடு விட்டான்

ராமு: எதுக்கு அந்த கஸ்டமரை திட்டிட்டு இருக்க?

சோமு: பின்ன என்னடா.. ஜெராக்ஸ் கடையில வந்து சக்கரை தூக்கலா ஒரு ‘காபி’ கேக்குறான்!

கந்துவட்டி காதல்

ராமு: என் காதலி என்னை அடிச்சிட்டாடா..

சோமு: ஏன்டா திடீர்னு?

ராமு: உன்மேல ஏன், எனக்கு இன்ட்ரஸ்ட் வருதுனு கேட்டா..

சோமு: நீ என்ன சொன்ன?

ராமு: போன ஜென்மத்துல என்ட்ட லோன் வாங்கியிருப்பனு சொன்னேன்!

கலக்குறேன் கலக்குறேன்..

ராமு: மச்சான்.. இந்த உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை..

சோமு: இங்கே தான் இருந்துச்சு..

ராமு: எனன் மச்சான் தேடுற?

சோமு: இல்ல.. இங்கே தான் கலக்குற கரண்டி இருந்துச்சு.. அத தான் தேடுறேன்!

மச்சம் அப்படி

ராமு: எதுக்கு அந்த ஜோதிடரை திட்டுற..

சோமு: என் கையைப் பார்த்து, இந்த மச்சம் இருக்கிறவங்களுக்கு அருமையான மனைவி அமைவாங்கன்னு சொல்றாரு!

ராமு: அதுல என்னடா பிரச்சினை?

சோமு: டேய்.. அது மச்சம் இல்ல.. என் பொண்டாட்டி போட்ட சூடுடா!

சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.