Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடி; குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்று! குக் வித் கோமாளி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடி; குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்று! குக் வித் கோமாளி ரெசிபி!

Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடி; குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்று! குக் வித் கோமாளி ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jul 25, 2024 06:17 AM IST

Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடியை குழந்தைகள் விரும்பக்கூடிய வகையில் செய்து சாப்பிட வேண்டுமெனில், இந்த குக் வித் கோமாளி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடி; குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்று! குக் வித் கோமாளி ரெசிபி!
Tamarind Rice Pre Mix : கோயில் புளியோதரைப் பொடி; குழந்தைகள் விரும்பக்கூடிய ஒன்று! குக் வித் கோமாளி ரெசிபி!

இதை உங்களுக்கு தேவையான அளவு செய்து வைத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் போதும். ஒரு மாதம் வரை கெடாது. 

உங்களுக்கு தேவைப்படும்போது எடுத்து எளிதாக செய்துவிடலாம் புளியோதைரையை. வீட்டிலே செய்வதால், சுவை நிறைந்ததாக இருக்கும்.

இது ஒரு சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். பொதுவாகவே பெருமாள் கோயில் புளியோதரையின் சுவை நாம் வீட்டில் எத்தனை மெனக்கெட்டு செய்தாலும் கிடைக்காது. 

அதற்கு இந்த ரெசிபியை சேமித்து வைத்துக்கொண்டால் போதும். செய்து வைத்துக்கொண்டு அடிக்கடி கோயில் புளியோதரையை ருசிக்கலாம்.

இந்த புளியோதரைப் பொடி செய்வது எப்படி? அந்த பொடியை வைத்து புளியோதரை செய்வது எப்படி என்று இரண்டு ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதை செய்து கட்டாயம் சாப்பிட்டு மகிழுங்கள், இது ஒரு சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு ஒரு ரெசிபியாக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடலை பருப்ப – 2 ஸ்பூன்

வர மல்லி – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

எள்ளு – அரை ஸ்பூன்

அரிசி – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி

வர மிளகாய் – 4

கருப்பட்டி – சிறிது

மஞ்சள் தூள்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயை சூடாக்கி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவேண்டும். வரமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, அரிசி, வர மிளகாய் என அனைத்தையும் வறுத்துக்கொள்ளவேண்டும்.

எண்ணெய் ஊற்றி புளி, கட்டி பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஆற வைத்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கருப்பட்டி சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்புன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 2

கடலை – ஒரு கைப்பிடியளவு

அரைத்து வைத்துள்ள புளியோதரைப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

வேகவைத்து வடித்த சாதம் – ஒரு கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன், கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவந்தவுடன், வர மிளகாய், கறிவேப்பிலை, கடலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கவேண்டும்.

அரிசியை வேக வைத்து, சாதத்தை வடித்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக ஆறவைத்து, இங்கு தாளித்த பொருட்களை சேர்த்து கிளறினால், சூப்பர் சுவையில் புளியோதரை தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள உங்களுக்கு வெறும் வற்றல் மற்றும் தேங்காய் துவையலே போதுமானது. சூப்பர் சுவையில் கிடைக்கும் இந்த பெருமாள் கோயில் புளியோதரையை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.