கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்க; இந்த விடுகதைகளை மாற்றி மாற்றிக் கேட்டு விளையாடுங்கள்! மூளைக்கும் வேலை!
உங்கள் மூளையை ஷார்ப்பாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்ங்க.
நான் ஒரு போர்வையும் அல்ல, ஆனால் நான் நிலத்தை போர்த்தியிருப்பேன். சொர்க்கத்தில் இருந்து வரும் கல்லைப்போன்றவன், ஆனால் சத்தம் எழுப்ப மாட்டேன். நான் யார்?
பனிக்கட்டி.
மேலிருந்து கீழே விழும். ஆனால் மீண்டும் மேலே செல்லாது. அது என்ன?
மழை.
டேவிட்டின் தந்தைகக்கு மூன்று குழந்தைகள். முதலாமவரின் பெயர் ஸ்னாப், இரண்டாமவரின் பெயர் கிராக்கிள், மூன்றாம் நபரின் பெயர் என்ன?
டேவிட்.
உடைத்தால்தான் பலன் தருவான் அவன் யார்?
மூட்டை.
என்னை எளிதாக தூக்கிவிடலாம். ஆனால் தூக்கி எறிவது சிரமம். நான் யார்?
இறகு.
எந்த மீன் அதிக விலைக்கு விற்கும்?
கோல்ட் ஃபிஷ்.
கழுத்து உண்டு எனக்கு தலை இல்லை
பாட்டில்
உடல் முழுவதும் ஓட்டை ஆனாலும் தண்ணீரை தக்கவைத்துக்கொள்வேன். நான் யார்?
ஸ்பான்ஞ்ச்
இந்த எண்ணுடன் எந்த எண்ணை பெருக்கினாலும், அதன் பதில் மாறாது. அது என்ன எண்?
பூஜ்ஜியம்.
நான் இறப்பதற்கு முன் என் அம்மாவை முத்தமிடுகிறேன், நான் யார்?
தீக்குச்சி.
எனக்கு ஒற்றைக் கண் உள்ளது. ஆனால் என்னால் பார்க்க முடியாது. நான் யார்?
ஊசி.
எனக்கு 6 முகங்கள், 21 கண்கள் உள்ளன. ஆனால் என்னால் பார்க்க முடியாது. நான் யார்?
பகடைக்காய்.
நான் எப்போதும் ஓடுகிறேன். நடக்கவே மாட்டேன். நான் யார்?
நதி அல்லது ஆறு.
நீங்கள் என்னை மீண்டும் பார்க்க மாட்டீர்கள். நான் யார்?
கடந்த காலம்.
நான் இறக்கும்போதுதான் படுக்கிறேன். நான் யார்?
மரம்.
எதை நெருப்பில் எரிக்க முடியாது. தண்ணீரில் மூழ்கடிக்க முடியாது?
பனிக்கட்டி.
என் கண்களில் உன் விரல்களை வைத்தால் நான் என் வாயைத் திறக்கிறேன். நான் யார்?
கத்தரிக்கோல்.
எனக்கு உயிர் இல்லை. ஆனால் இறக்கிறேன். நாய் யார்?
பேட்டரி.
என்னால் பறக்க முடியும். ஆனால் இறக்கை இல்லை. என்னால் அழ முடியும் கண்கள் இல்லை. நான் எங்கு சென்றாலும் இருள் என்னை பின்தொடரும். நான் யார்?
மேகம்.
பெரும்பாலான நேரத்தை தரையில் செலவழிக்கிறது. ஆனால் அழுக்காகாது. அது என்ன?
நிழல்.
நான் அழுக்காக இருக்கும்போது வெள்ளையாகவும், சுத்தமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கிறேன். நான் யார்?
கரும்பலகை.
பிடிக்கவே முடியாத கள்ளன் அவன் யார்?
புகை.
போட்டால் பொரியும் கருப்பு முட்டை. அது என்ன?
கடுகு.
மண்ணுக்குள்ளே மக்காத கயிறு. அது என்ன?
மண்ணுளிப்பாம்பு.
மண்ணுக்குள்ளே மயிர்கோதி. அது என்ன?
பனங்கிழங்கு.
வளைக்க முடியும், உடைக்க முடியாது. அது என்ன?
தலைமுடி.
வானத்துக்கும், பூமிக்கும் ஒரே கம்பி. அது என்ன?
மழை.
வீடில்லா நகரங்கள், நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?
வரைபடம்.
மளிகைக்கடையில் இருக்கும் ராணி. அது என்ன?
சாம்பிராணி.
பறிக்கப்பறிக்கப் பெரிதாகிறது. அது என்ன?
குழி.
அந்தரத்தில் ஒரு தொட்டில். அது என்ன?
தூக்கணங்க குருவிக்கூடு.
அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கிறது. அது என்ன?
சங்கு.
அது ஓர் அழகு தேவதை. ஆடும், ஓடும் தேவதை அது என்ன?
மயில்.
அதிர் புதிர் போட்ட பொன்னன் தாய்க்கு, முதுகிலே 300 அடி. அது என்ன?
சல்லடை.
அம்மா தந்த தட்டிலே தண்ணீர் ஊற்றினால் நிற்காது. அது என்ன?
தாமரை இலை.
அலறி அலறி கூப்பிடுவான், அசந்தால் அடங்கிவிடுவான். அவன் யார்?
தொலைபேசி.
ஆட்டிவிட்டால் ஆடும். அந்தரத்திலே தொங்கும்.
ஊஞ்சல்.
ஆதவன் உதித்தால் மறைந்திடும். ஆயிரம் விளக்கை அணைத்திடும். அது என்ன?
இருள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்