Systematic Investment Plan : வருமானம்–செலவு–சேமிப்பு! முறையான முதலீட்டுக்கு திட்டமிடுவது எப்படி? நிபுணர்கள் பரிந்துரை
Systematic Investment Plan : இது ஒரு நல்ல தொகைதான், ஆனால் போதுமானதா? உங்கள் எதிர்கால திட்டத்துக்கு இவை பத்துமா என்பதை ஆராய்ந்து மாதந்திர முறையான முதலீட்டு திட்டத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நீங்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள், அது நீங்கள் வரிக்காக செய்வது. மாதந்திதிர முறையான முதலீட்டு திட்டத்தில் சில ஆயிரங்கள் உதாரணமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கிறீர்கள். சில காலங்களில் அது உயர்வதை கண்டு கூடுதலாக முதலீடு செய்ய முனைந்து மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முதலீடு செய்கிறீர்கள்.
இது ஒரு நல்ல தொகைதான், ஆனால் போதுமானதா? உங்கள் எதிர்கால திட்டத்துக்கு இவை பத்துமா என்பதை ஆராய்ந்து மாதந்திர முறையான முதலீட்டு திட்டத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
உங்களுக்கு இப்போது 33 வயதாகிறது. உங்களின் மாத வருமானம் ரூ.1.40 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். உங்களின் மாத செலவுகள் ரூ.80 ஆயிரம், மிஞ்சுவது ரூ.60 ஆயிரம்.
இதில் நீங்கள் ரூ.15 ஆயிரத்தை மியூச்சுவல் பண்டில் சேர்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தமாக செலவழித்துவிடாமல் இதை சேமிப்பது சிறந்தது.
உங்களுக்கு சில லட்சியங்கள் உள்ளன. அதில் முதலாவது வீடு, அதற்கு உங்களுக்கு ரூ.15 லட்சம் தேவைப்படும். பின்னர் உங்கள் குழந்தையின் உயர்கல்வி, ரூ.50 லட்சம். அதை நீங்கள் 12 ஆண்டுகளில் சேர்க்க வேண்டும். 20 ஆண்டுகளில் உங்களின் ஓய்வு காலத்திற்கு தேவைப்படும் தொகையையும் சேர்க்க வேண்டும்.
இதுதான் உங்களுக்கு தேவையான பணம் எனில், நீங்கள் சேமிக்கும் ரூ.15 ஆயிரம் அதற்கு போதாது. எனில் எவ்வளவு தேவை?
மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரை சேமிப்பது வீடு கட்டுவதற்கான முதல் தொகை கொடுக்க தேவையானது.
ரூ.18 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரை 12 ஆண்டுக்கு மாதம் சேமிப்பது குழந்தையின் உயர்கல்விக்கு தேவைப்படும்.
ரூ.56 ஆயிரம் முதல் 57 ஆயிரம் வரை நீங்கள் ஓய்வுக்காலாத்திற்காக மாதாமாதம் சேமிக்க வேண்டும்.
எனவே நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை சேமிக்க வேண்டும். ஆனால் உங்களிடம் மிஞ்சுவது ரூ.60 ஆயிரம் மட்டுமே. அதிலும் நீங்கள் ரூ.15 ஆயிரம் மட்டுமே சேமிக்கிறீர்கள். ஆனால் ரூ.1 லட்சம் சேமிக்க வேண்டும்.
எனவே தேவைக்கும், இருப்பதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. எதற்குமே நீங்கள் முழுமையாக செலவிட முடியாது. எனில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டுக்கு ரூ.25 ஆயிரம், குழந்தை உயர் கல்விக்கு ரூ.20 ஆயிரம், எஞ்சிய ரூ.15 ஆயிரம் ஓய்வு காலத்துக்கு என பிரிந்து சேமித்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஓய்வு காலத்திற்கு நமது நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு தொகை முதலீடு செய்யப்படுகிறது. எனவே இதில் குறைத்துக்கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் உங்களின் வருமானம் அதிகரித்துக்கொண்டே செல்லும்போது நீங்கள் அதற்கு ஏற்றாற்போல் சேமிப்பையும் அதிகரிக்க முடியும். இதில் ஏதேனும் ஒரு லட்சியம் முடிவடையும்போது, வீட்டுக்கடன், குழந்தை கல்வி என அனைத்தும் ஒவ்வொன்றாக முடிவடையும்போது, நீங்கள் ஓய்வு கால தொகையை அதிகரித்துக்கொள்ளலாம்.
இப்படி நீங்கள் மாதாந்திர சேமிப்பை திட்மிட்டுக்கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு இந்த முறையான மாதாந்திர சேமிப்பு நிச்சயம் கைகொடுக்கும். மாதாந்திர தொகையாக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கும் நீங்கள் தொகையை சேமிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் இதேபோன்ற சேமிப்பு உங்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டாபிக்ஸ்