Symptoms of Piles உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? மூல நோயா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்!
Symptoms of Piles உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? மூல நோயா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்!

ஆசணவாய்ப்பகுதி அல்லது மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டால் வருவது மூலநோய். இதனால் அந்தப்பகுதியில் உங்களுக்கு சிரமம் ஏற்படும். இது பல்வேறு அளவுகள் மற்றும் இடங்களில் ஏற்படும்.
மூலத்தில் உள் மூலம், வெளி மூலம் என்ற வகைகள் உள்ளது. உள்மூலம் என்பது மலக்குடலுக்கு உள்ளே ஏற்படுவது. அது வெளியில் இருந்து பார்க்கும்போது தெரியாது. வெளி மூலம் என்பது ஆசணவாய்க்கு வெளியே ஏற்படுவது.
மூலநோயில் பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றாது. அதுவே குணமடையும். அதிகரிக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஆசணவாயை சுற்றி, வலிநிறைந்த கட்டிகள் ஏற்படும். ஆசணவாயில் எரிச்சல், அரிப்பு மற்றும் அசவுகர்யங்கள் தோன்றும். மலம் கழித்தவுடன் அசவுகர்யம் ஏற்படும். மலத்தில் ரத்தம் வெளியேறும்.
கடுமையாகிவிட்டால்,
அதிகளவில் ரத்தம் வெளியேறி, அனீமியாவை ஏற்படுத்தும்.
தொற்று, ஆசனவாயில் புண், ஆசனவாய்க்கு ரத்த ஓட்டம் தடைபடுவது ஆகியவை ஏற்படும்.
இவைதான் மூலநோயின் அறிகுறிகள். ஒரு வாரத்துக்கு மேல் இவை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
காரணங்கள்
மலக்குடலில் அழுத்தம் அதிகரிக்கும்போது, மூலநோய் ஏற்படுகிறது.
ஆசணவாயைச் சுற்றி ரத்த நாளங்கள் மற்றும் மலக்குடல் அழுத்தத்தால் விரிவடையும்போதும் அல்லது வீங்கும்போதும் மூலம் ஏற்படுகிறது.
நாள்பட்ட மலச்சிக்கல்
நாள்பட்ட வயிற்றுப்போக்கு
அதிக எடையை தூக்குவது
மலம் கழிக்கும்போது சிரமம்
ஆபத்து காரணிகள்
கர்ப்ப காலத்தில், மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது இடுப்பில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவோ அல்லது மலச்சிக்கலாலோ இருக்கலாம்.
வயோதிகர்களில் அதிகம் ஏற்படும். 50 வயது மேற்பட்டவர்களுக்கு பொதுவானது.
எடை, அதிக எடையும் மூலநோய் ஏற்பட வாய்ப்பாகும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை மூல நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய் கண்டறிதல்
உடல் பரிசோதனை செய்து மருத்துவர் மூலநோயை கண்டுபிடிப்பார். முதலில் மூலநோய் சந்தேகம் இருந்தால், அவர்கள் ஆசணவாயை சோதிப்பார்கள்.
உள் மூலத்தை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில் மலக்குடலை சோதிப்பார்கள் அல்லது புரோக்டோஸ்கோப் பயன்படுத்தி கண்டுபிடிப்பார்கள். ஒளி நிரம்பிய குழாயை, இது ஆசணவாய் வழியாக மூலநோயை கண்டுபிடிக்க உதவும். அதிலிருந்து திசுக்கள் எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. மூலநோய் கண்டறிய கெலோனோஸ்கோப்பி சோதனையும் உதவுகிறது.
சிகிச்சைகள்
பெரும்பாலான மூலநோய்கள் தானாகவே குணமடையக்கூடியவை. சிகிச்சையே தேவையில்லை. எனினும், சில சிகிச்சைகள் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்ய கொடுக்கப்படுகிறது.
வாழ்வியல் மாற்றங்கள் தேவை. முதலில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். மலத்தை இலகுவாக்கும் உணவுகள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். முக்கி மலம் கழிப்பதால் இந்த பிரச்னை ஏற்படும். உடல் எடையை குறைப்பதும் மூலநோயின் தீவிரத்தை குறைக்க உதவும். அதிக தண்ணீர் பருகுவதும் நல்லது. மூலத்தை தடுக்க உடற்பயிற்சி மற்றும் மலக்கழிக்கும்போது முக்குதல் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மருந்துகள்
வலி நிவாரணிகள், மலத்தை இலகுவாக்கும் மருந்துகள், எரிச்சல், வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும் களிம்புகள் வழங்கப்படுகிறது. கடுமையாக இருக்கும்போது அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகிறது. அவை பலவகைப்படும்.
ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்வது, முக்கி மலம் கழிக்காமல் இருப்பது, அதிக எடையை தூக்காமல் தவிர்ப்பது, மிதமான உடல் எடையை பராமரிப்பது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது மூலநோயை தடுக்க உதவும் வழிகள் ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்