இனிப்பு பிரியரா? நீங்கள் அதிகம் எடுக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கையாக இருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனிப்பு பிரியரா? நீங்கள் அதிகம் எடுக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கையாக இருங்கள்!

இனிப்பு பிரியரா? நீங்கள் அதிகம் எடுக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கையாக இருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 03, 2025 02:42 PM IST

அதிகம் சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இனிப்பு பிரியர் என்றால், இதெல்லாம் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

இனிப்பு பிரியரா? நீங்கள் அதிகம் எடுக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கையாக இருங்கள்!
இனிப்பு பிரியரா? நீங்கள் அதிகம் எடுக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கையாக இருங்கள்!

அடிக்கடி ஆற்றல் இழப்பது

நீங்கள் அதிகம் சர்க்கரை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் உடலில் ஆற்றல் இருப்பது போல தோன்றும். ஆனால் அது உடனே குறைந்துவிடும். இது உங்கள் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, உங்கள் உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றல் கிடைப்பதற்காக போரா வேண்டிய நிலை ஏற்படும்.

இனிப்பு சாப்பிடும் எண்ணம்

உங்கள் உடலில் அதிகம் சர்க்கரை சேர்ந்து விட்டால் உங்களுக்கு அடிக்கடி சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதனால் நீங்கள் மேலும் இனிப்புக்களை சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் இடம்பெறவேண்டும். வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கட்டாயம் கசப்பு சேர்க்கவேண்டும்.

உடல் எடை

நீங்கள் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். உங்கள் உடலுக்கு அதிக கலோரிகளை கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக உங்களுக்கு தொப்பை ஏற்படும். இதனால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையைத் தரும்.

சரும கோளாறுகள்

அதிகம் சர்க்கரை எடுத்துக்கொள்வது உங்கள் சருமத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும். சருமம் பொலிவை இழக்கும். சரும்த்தில் தேமல் ஏற்படும். முகப்பருக்கள் உள்ளிட்ட சரும கோளாறுகள் மற்றும் நோய்களை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடல் பாதிக்கப்படும். உங்கள் சரும ஆரோக்கிய கெடும்.

மனநிலையில் மாற்றம்

சர்க்கரையில் பாதிப்புக்கள் உங்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் மூளையின் வேதியியல் மாற்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்டுத்தும். மேலும் உங்களுக்கு எரிச்சல், பயம், பதற்றம் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இதனால் உங்களுக்கு உணர்வு ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் குறைக்கும். எனவே அதிக சர்க்கரையை எப்போதும் குறைத்துக்கொள்வது நல்லது.

நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்பு

நீங்கள் அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை குறைத்து, உங்களுக்கு நோய்கள் ஏற்படும் பாதிப்புக்களை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்து போராட வைக்கிறது. இதனால் உங்களுக்கு நோய்கள் மற்றும் ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுகிறது.

பல் கோளாறுகள்

அதிகப்படியான சர்க்கரையை நீங்கள் சாப்பிட்டால், அது உங்களுக்கு பற்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகிறது. இதனால், பற்சிதைவு மற்றும் ஈறுகளில் நோய் தொற்றுகள் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த பல் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கிறது. இதனால் உங்களுக்கு நாள்பட்ட பல் கோளாறுகள் ஏற்படுகிறது.

நாள்பட்ட வலி

நீங்கள் அதிக சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு அது நாள்பட்ட வலியை ஏற்படுத்துகிறது. இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையுமே சீர் குலைக்கிறது. எனவே அளவான சர்க்கரை மகிழ்வான வாழ்க்கை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.