இனிப்பு பலகாரம்: ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் கேரட் ரசகுல்லா! இப்படி செஞ்சு ருசியுங்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனிப்பு பலகாரம்: ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் கேரட் ரசகுல்லா! இப்படி செஞ்சு ருசியுங்கள்

இனிப்பு பலகாரம்: ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் கேரட் ரசகுல்லா! இப்படி செஞ்சு ருசியுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 15, 2025 05:52 PM IST

கேரட் ரெசிபிக்களில் இனிப்பு பலகாரமான கேரட் ஹல்வா பலரும் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் கேரட்டை வைத்து ருசியான ரசகுல்லா சாப்பிட்டிருக்க வாய்ப்பு குறைவுதான். அனைவருக்கும் பிடித்தமான சுவை மிகுந்த ரசகுல்லா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் கேரட் ரசகுல்லா! இப்படி செஞ்சு ருசியுங்கள்
ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் கேரட் ரசகுல்லா! இப்படி செஞ்சு ருசியுங்கள்

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கேரட்டை இந்த சுவையான காய்கறியைக் கொண்டு பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக கேரட்டை வைத்து கேரட் கறி, கேரட் குழங்கு, கேரட் கீர், கேரட் ரைஸ், கேரட் பரோட்டா, கேரட் அல்வா, கேரட் பால்கோவா போன்றவை பலருக்கும் பிடித்தமான கேரட் ரெசிபிக்களாக இருக்கின்றன. ஆனால் பால் வைத்து மென்மையாக உருண்டையாக தித்திக்கும் சுவையுடன் தயார் செய்யக்கூடிய ரசகுல்லாவை, கேரட் வைத்து தயார் செய்து சாப்பிட்டுள்ளீர்களா?

கேரட்டின் இயற்கையான இனிப்பு சுவையுடன் இருக்ககூடிய இந்த கேரட் ரசகுல்லா, அனைவருக்கும் பிடித்தமான டெஸ்ஸர்ட் வகையாக இருக்கும். அந்த வகையில் ஜூசியான ரசகுல்லா எப்படி செய்யாம் என்பதை பார்க்கலாம்

கேரட் ரசகுல்லா செய்ய தேவையான பொருட்கள்

  • பெரிய கேரட் - 2 முதல் 3
  • பால் - 2 கப்
  • நெய் - 3 டீஸ்பூன்
  • பாம்பே ரவா - 1 கப்
  • சர்க்கரை - 3 டீஸ்பூன்
  • உணவு நிறம் - ஆரஞ்சு
  • ரசகுல்லாவுக்கான பாகு செய்ய
  • சர்க்கரை - ஒரு கப்
  • தண்ணீர் - அரை கப்
  • ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

மேலும் படிக்க: பேக்கரிக்கு போக வேண்டாம்..  குலு குலு ரசகுல்லா! வீட்டிலேயே செய்வது எப்படி?

கேரட் ரசகுல்லா செய்முறை

  • கேரட் ரசகுல்லாக்கள் செய்ய, முதலில் இரண்டு பெரிய கேரட்டை எடுத்து, அவற்றை நன்றாக கழுவி, தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும். அவை சிவப்பு கேரட்டாக இருந்தால், செய்முறை மிகவும் சுவையாக இருக்கும். நிறமும் மிகவும் நன்றாக இருக்கும்.
  • இப்போது இந்த கேரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அரை கப் பால் சேர்த்து மென்மையான பேஸ்டாக அறைத்து கொள்ளவும்.
  • இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, இரண்டு ஸ்பூன் நெய்யை சேர்த்து சூடாக்கவும்.
  • பின்னர் அதில் கேரட் பேஸ்ட்டை சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • கேரட் பேஸ்ட் அனைத்தும் நெய்யில் நன்கு வதங்கிய பிறகு, அதில் அரை கப் சூடான பால் சேர்க்கவும்.
  • இப்போது இந்தக் கலவையை மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை கிளறிக்கொண்டே சமைக்கவும்.
  • பால் கொதிக்கும் போது, ​​அதில் ஆரஞ்சு நிற உணவு நிறத்தைச் சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் அதில் ஒரு கப் பாம்பே ரவையைச் சேர்க்கவும். ரவை பாலுடன் கலக்கும் வரை கட்டிகள் உருவாகாதபடி தொடர்ந்து கலக்கவும்.
  • ரவை முழுவதும் வெந்து மாவாக மாறியதும், அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.
  • இந்தக் கலவையை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
  • குளிர்ந்த பிறகு, கேரட் பேஸ்ட்டை உருண்டைகளாக்கவும். நீங்கள் விரும்பினால், விருப்பமான வடிவங்களிலும் உருட்டி கொள்ளலாம் .

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குலாப் ஜாமூன்.. எப்படி செய்வது பாருங்கள்

  • இந்த உருண்டைகளை ஒரு வலைப் பாத்திரத்தில் போட்டு ஒதுக்கி வைக்கவும்.
  • இப்போது இன்னொரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்
  • தண்ணீர் கொதிக்கும் போது, ​​அதன் மீது ஒரு வலைப் பாத்திரத்தை வைத்து ரசகுல்லாக்களை நீராவியில் சமைக்கவும். சுமார் பத்து நிமிடங்கள் வேகவைத்த பிறகு, ரசகுல்லாக்களை எடுத்து சிறிது ஆற விடவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது, ​​அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
  • நன்றாக கொதித்ததும், அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • சர்க்கரை பாகு சிறிது ஆறிய பிறகு, ரசகுல்லாக்களை பாகில் சேர்த்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • அவ்வளவுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழக்கூடிய கேடர் ரசகுல்லா தயார்

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.