தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sweating And Weight Lose : உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா? இது எந்த அளவுக்கு உண்மை தெரியுமா!

Sweating and Weight lose : உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா? இது எந்த அளவுக்கு உண்மை தெரியுமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 02, 2024 02:13 PM IST

Sweating and Weight lose : நிபுணர்களின் கூற்றுப்படி, வியர்வை உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது. ஆனால் எடை இழப்புக்கும் வியர்வைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது, வேகமான நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடல் செயல்பாடுகளைச் செய்வது கலோரிகளை மட்டுமே எரிக்கிறது.

உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா? இது எந்த அளவுக்கு உண்மை தெரியுமா!
உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் உடல் எடை குறையுமா? இது எந்த அளவுக்கு உண்மை தெரியுமா! (pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

நமக்கு ஏன் வியர்க்கிறது?

வியர்வை உங்கள் உடல் எடையை குறைக்க உதவுமா என்பதை நீங்கள் அறிவதற்கு முன், நமக்கு ஏன் வியர்க்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் சுறுசுறுப்பாக இயங்கி, வியர்வை வெளியேறும். அப்படி வெளியாகும் வியர்வை நமது உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால், உடல் வெப்ப நிலை குறைகிறது. கோடையில், உடற்பயிற்சி அல்லது எந்த உடல் செயல்பாடுகளின் போது, உடல் வெப்பநிலை வேகமாக உயரும். இது வியர்வையையும் அதிகரிக்கிறது.

வியர்வையால் உடல் எடை குறையுமா?

வியர்வையால் உடல் எடை குறையும் என்று இப்போதும் மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அது முற்றிலும் தவறானது. நிபுணர்களின் கூற்றுப்படி, வியர்வை உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது. ஆனால் எடை இழப்புக்கும் வியர்வைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது, வேகமான நடைபயிற்சி அல்லது வேறு ஏதேனும் உடல் செயல்பாடுகளைச் செய்வது கலோரிகளை மட்டுமே எரிக்கிறது. இது எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. கொழுப்பை எரிக்காது. 

வியர்வையின் நன்மைகள்

அதே சமயத்தில் வியர்வை சுரப்பதால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடல் எடையை குறைக்காது, ஆனால் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வியர்வை உடலின் துளைகள் வழியாக உட்புற நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் சேரும் அழுக்குகள் வியர்வை மூலமாகவும் வெளியேறுகிறது. இதனால் சருமம் பளபளப்பாகும். உடல் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக சிலருக்கு அதிக வெப்பம், உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியின் காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. இது சில உள்நோய்களின் அறிகுறி என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மட்டாலஜி'யில் வெளியிடப்பட்ட 2016 அறிக்கையின்படி, வியர்வை தோலின் pH அளவை சமன் செய்கிறது. இது நமது சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வியர்க்கவில்லை என்றால் நல்லது என்று நினக்க வேண்டாம். வியர்வை குறைவதால் உடல் நலக்குறைவு ஏற்படும்.

அதிக வியர்வை வெளியேறுவதால் சிறுநீரக கற்கள் ஏற்படாது. ஏனெனில் அதிகப்படியான சோடியம் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. இதனால் எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்கும். அதிகப்படியான சோடியம் கால்சியத்தை உறிஞ்சும் உடலின் திறனைக் குறைக்கிறது. அதனால்தான் வியர்வை மூலம் சோடியத்தை வெளியேற்றுகிறோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.