Surya Namaskaram: இளமை துள்ள வேண்டுமா? சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Surya Namaskaram: இளமை துள்ள வேண்டுமா? சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்!

Surya Namaskaram: இளமை துள்ள வேண்டுமா? சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்!

I Jayachandran HT Tamil
Jan 15, 2023 10:41 PM IST

சூரிய நமஸ்காரத்தினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம் மிகவும் பிரபலமான யோகா பயிற்சிகளில் ஒன்றாகும். சூரிய நமஸ்காரம் என்பது எந்த ஒரு யோகா பயிற்சியாளராலும் செய்யப்படும் முதல் ஆசனமாகும். யோகா வல்லுனர்களின் கூற்றுப்படி, சூரிய நமஸ்கார ஆசனங்களைப் பயிற்சி செய்வது, தொப்புளுக்குப் பின்னால் அமைந்துள்ள மணிப்பூர சக்கரத்தை தூண்டுகிறது. இந்த யோகாவை துல்லியமாக பயிற்சி செய்வது ஒரு நபரின் இயல்பான திறன்களை அதிகரிக்கிறது.

பல்வேறு வகையான சூரிய நமஸ்காரங்கள் உள்ளன. இவை அனைத்தும் முழு உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், தசைகளை நெகிழ்வாக மாற்றவும் உதவுகின்றன.

ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்துக்கும் வெவ்வேறு நோக்கம் உள்ளது. சூரிய நமஸ்காரத்தில் மேம்பட்ட ரத்த ஓட்டம், எடை இழப்பு, நுரையீரல் செயல்பாடு, சுவாச அழுத்தத்தின் நிவாரணம், கைகளில் விறைப்பு போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ரத்த ஓட்டம் மேம்படுவதால் ஆரோக்கியமான சருமம், கூந்தல் மற்றும் பளபளப்பான முகம் கிடைக்கும். இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் பிடிப்புகளை விடுவிக்கிறது.

சூரிய நமஸ்காரங்களில் தினமும் பயிற்சி செய்ய வேண்டிய சில அற்புதமான நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1. சாஷ்டாங்கமாக நிற்தல்

இது பிரார்த்தனை போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நேராக நிற்கவும். உங்கள் கால்களை ஒன்றாக இணைக்கவும். ஆழ்ந்த மூச்சை எடுத்து, உங்கள் மார்பை விரித்து, உங்கள் தோள்பட்டையை நிதானமாக வைத்திருங்கள். நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, ​​​​கைகளை உங்கள் பக்கங்களிலிருந்து உயர்த்தவும். சுவாசிக்கும்போது உங்கள் உள்ளங்கைகளை உங்கள் மார்பின் முன் ஒரு பிரார்த்தனை நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

2. ஹஸ்த உத்தனாசனம்

ஒரு பிரார்த்தனை போஸ் போல உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக வைத்திருங்கள். ஆழ்ந்த மூச்சை எடுத்து, உங்கள் கைகளை மேலே உயர்த்தவும். இப்போது, ​​சற்று பின்னால் சாய்ந்து, உங்கள் புஜங்களை காதுகளுக்கு அருகில் கொண்டு வாருங்கள்.

3. ஹஸ்த பதாசனம்

மூச்சை உள்ளிழுக்கும்போது முதுகெலும்பை நேராக வைத்து இடுப்பை முன்னோக்கி வளைக்கவும். தரையைத் தொட முயற்சிக்கவும். நீங்கள் இந்த நிலையில் இருக்கும்போது, ​​மெதுவாக ஆழ்ந்து மூச்சை இழுக்கவும்.

4. அஸ்வ சென்சனாசனம்

உங்கள் முழங்கால்களை சற்று வளைத்து, உங்கள் உள்ளங்கைகளை உங்கள் கால்களுக்கு அடுத்ததாக தரையைத் தொடும் வகையில் வைக்கவும். ஆழ்ந்த மூச்சை எடுத்து, உங்கள் வலது முழங்காலை உங்கள் மார்பின் வலது பக்கம் கொண்டு வந்து, உங்கள் இடது காலை பின்னால் நீட்டவும். உங்கள் தலையை உயர்த்தி நேரே பாருங்கள்.

5. சதுரங்க தண்டாசனம்

இதுவும் எளிதான ஆசனம். கீழே படுத்து உங்கள் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி, உங்கள் கால்களை பின்னால் நீட்டி, சுவாசிக்கவும். உங்கள் உடல் தரையில் இணையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் விரைவிலேயே இளமையாகத் தோன்றுவீர்கள்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.