Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி! அடிக்கடி சாப்பிட பலன் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி! அடிக்கடி சாப்பிட பலன் உறுதி!

Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி! அடிக்கடி சாப்பிட பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Updated Jul 18, 2024 05:30 AM IST

Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி, அடம்பிடிக்கும் தொப்பையை அடித்து விரட்டும். அடிக்கடி சாப்பிட பலன் உறுதியாகக் கிட்டும்.

Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி! அடிக்கடி சாப்பிட பலன் உறுதி!
Suraikai Pachadi : உடல் எடையை உடனடியாகக் குறைக்கும் சுரைக்காய் பச்சடி! அடிக்கடி சாப்பிட பலன் உறுதி!

ஆனால் சுரைக்காயை அப்படி மட்டுமே சாப்பிடுவது போர் அடித்துவிடும். எனவே, அதை பச்சடியாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – 2 கப் (தோல் நீக்கி சத்தம் செய்து சிறு துண்டகளாக நறுக்கியது)

எண்ணெய் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 4 அல்லது உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.

புளி – சிறிதளவு

தக்காளி – 1 (பெரியது, நறுக்கியது)

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், புளி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக சுரைக்காயில் தண்ணீர் வரும் அளவு வதக்கவேண்டும்.

சுரைக்காய் நிறம் மாறி பச்சை வாசம் போகும்வரை அதை வதக்கவேண்டும். கடைசியாக பச்சை மிளகாய், போதிய அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்ததில் சேர்த்தால் மணமணக்கும் சுரைக்காய் பச்சடி ரெடி.

இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோல் அடிக்கடி செய்து சாப்பிட்டுவரும்போது உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு உங்கள் உடல் எடை மளமளவென குறையும்.

சுரைக்காயின் நன்மைகள்

நீர்ச்சத்துக்கள் நிறைந்தது

சுரைக்காய் நீர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு காய். அது உங்கள் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்வதுடன், உங்களின் தாகத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் உள்ள இந்த காய் உங்கள் உடலுக்கு கோடை காலத்திற்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலுக்கு நல்லது.

கலோரிகள் குறைவாக இருந்தாலும், உங்கள் உடலில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகிய மினரல்கள் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் பி ஆகிய முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

உடலுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது

சுரைக்காய் உடலுக்கு செரிமானத்தை அளிக்கக்கூடிய உணவுகளுள் ஒன்று. இதில் உள்ள உயர் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உடலில் செரிமானத்தை ஏற்படுத்துகிறது. குடல் நுண்ணுயிர்களை காக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

குளிர்ச்சியை அதிகரிக்கும்

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடிய உணவுகளுள் சுரைக்காயும் ஒன்று. இது உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. இது உடலில் பித்தத்தை கட்டுக்குள் வைப்பதுடன், கோடை வெப்பத்தை எதிர்த்து போராடுகிறது.

இதய ஆரோக்கியம்

சுரைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது 

சுரைக்காயில் உள்ள பொட்டாசியம், உடலில் சோடியத்தின் பாதிப்பை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் எடை கட்டுப்பாடு

சுரைக்காயில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. இதனால், தேவையற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. உடலில் கலோரிகளை குறைத்து, உடல் வளர்சிதையை பராமரிக்கிறது.

கழிவுநீக்கம்

சுரைக்காய் இயற்கை கழிவு நீக்கி, உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் தொற்றுகள் மற்றும் நோய்ளுக்கு எதிராக போராடுவதை உறுதிசெய்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது.