தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thyroid Function: உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேருங்கள்..! தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்

Thyroid Function: உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேருங்கள்..! தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 15, 2024 05:35 PM IST

அனைத்து வயதினருக்கும் தைராய்டு கோளாறு இருக்கிறது. நீங்கள் அன்றாடம் சாப்பிடக்கூடிய உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேருங்கள். தைராய்டு பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்.

 உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேர்த்தால் தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்
உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேர்த்தால் தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தைராய்டு கோளாறு ஏற்படுவதை தவிர்க்க உதவும் உணவு வகைகள் எழை என்பதை பார்க்கலாம்

பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி (அவுரிநெல்லிகள்), ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி போன்றவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்கின்றன. இவற்றில் வைட்டமின்கள், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

பெர்ரி பழங்கள்

பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி சார்பில் வெளியிடப்பட்ட 2022 ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தைராய்டு செயலிழப்பை நிர்வகிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவும் என கூறப்பட்டுள்ளது. ராஸ்பெர்ரிகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த சர்க்கரையுடன் நிரம்பியுள்ளன

ஆப்பிள்

நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் டாக்டரிடம் செல்வதை தவிரக்கலாம் என்ற பொவாக சொல்லப்படும் கருத்துக்கு ஏற்ப, தைராய்டு ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்காற்றுகிறது. ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும், ஆப்பிள்கள் உங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது

பிரேசில் நட்ஸ்கள்

பிரேசில் நட்ஸ்களில் இடம்பிடித்திருக்கும் செலினியம் தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி இதழின் மதிப்பாய்வின்படி, செலினியம் தைராய்டு சுரப்பியை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

நாள் தோறும் சில பிரேசில் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கான தினசரி செலினியம் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது

அவகோடா

வெண்ணெய் பழங்கள் என்ற அழைக்கப்படும் அவகோடா பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை தைராய்டு ஹார்மோன்கள் உட்பட ஹார்மோன் தொகுப்புகளுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.

வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. தைராய்டு கோளாறுகள் பெரும்பாலும் எடை பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

முட்டை

தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள சில உணவு வகைகளில் முட்டையும் ஒன்றாக உள்ளது. முட்டையில் ஐயோடின் மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி மற்றும் சமநிலைக்கு அவசியமானதாக இருக்கிறது. முட்டையில் உள்ள உயர்தர புரதம் தசை நிறையை பராமரிக்க உதவுகிறது.

யோகர்ட் அல்லது தயிர்

தயிர் அயோடின் பெறுவதற்கான சிறந்த மூலமாக உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இதில் நிறைந்திருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது.

ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அயோடின் உட்கொள்ளலைப் பூர்த்தி செய்ய வெற்று, குறைந்த கொழுப்புள்ள தயிர் அல்லது கிரேக்க யோகர்ட் தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளது

பூசணி விதைகள்

இதில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. துத்தநாகம், தைராய்டு ஹார்மோன் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதைகளை வழக்கமாக உட்கொள்வது இந்த ஊட்டச்சத்துக்களின் ஆரோக்கியமான விநியோகத்தை உறுதி செய்கிறது. இது தைராய்டு சீராக செயல்பட உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்