தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Sundakkai Vathal Podi Helps To Solve Stomach Problems Try This

Sundakkai Vathal Podi: வயிறு பிரச்சனைகளை தீர்க்க உதவும் சுண்ட வத்தல் பொடி.. இப்படி செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 06, 2024 05:45 AM IST

சுண்ட வத்தல் பொடியை இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் பொடியை சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.

 வயிறு பிரச்சனைகளை தீர்க்க  உதவும் சுண்ட வத்தல் பொடி
வயிறு பிரச்சனைகளை தீர்க்க உதவும் சுண்ட வத்தல் பொடி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சுண்ட வத்தல்

உளுந்தம் பருப்பு

கடலை பருப்பு

எள்ளு

உப்பு

சீரகம்

மிளகு

பெருங்காயம்

கறிவேப்பிலை

புளி

வெல்லம்

செய்முறை

சுண்ட வத்தலை ஒரு கப் அளவு எடுத்து நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தில் முதலில் காயவைத்து எடுத்த சுண்ட வத்தலை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த சுண்ட வத்தலை ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும். பின்னர் ஒரு கப் கருப்பு உளுந்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். உளுந்து வாசம் வர ஆரம்பிக்கும் போது அதையும் தட்டிற்கு மாற்ற வேண்டும்.

அதில் அரை கப் கடலை பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். கடலை பருப்பு சிவந்து வரும் போது அதையும் தட்டிற்கு மாற்றி விட வேண்டும்.

அதில் 10 வர மிளகாய் மற்றும் தேவையான கல் உப்பை சேர்த்து வறுக்க வேண்டும். (மிளகாய் வத்தல் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்)

பின்னர் இரண்டு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் மிளகை சேர்த்து வறுக்க வேண்டும்.

அதில் 50 கிராம் அளவு பெருங்காய கட்டியை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் இரண்டு கப் கறிவேப்பிலையை காய வைத்து அதே கடாயில் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

வறுத்து எடுத்த பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைத்து கொள்ள வேண்டும். அந்த பொடியை கொரகொரப்பாக அரைத்து நன்றாக ஆற விட வேண்டும். அந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து நன்றாக மூடி வைத்து விட வேண்டும்.

இந்த பொடியை குறைந்தது 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த சுண்ட வத்தல் பொடியை இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் பொடியை சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். 

சுண்டைக்காயின் நன்மைகள்

சுண்டைக்காய் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு உதவும். எனவே வயிற்று பூச்சிகளை சுத்தம் செய்ய தினமும் அதிக அளவு சுண்டைக்காயை உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான நோய்கள் வராமலும் சுண்டைக்காய் பாதுகாக்கும். காய்ச்சல் உள்ள போது அதிக அளவு சுண்டைக்காய் சாப்பிட்டு வர உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். இதனால் காய்ச்சல் விரைவில் குணமாகும். சுண்டைக்காயை அதிகம் சாப்பிட்டு வர அலர்ஜி மற்றும் அரிப்புகளினால் ஏற்பட்ட காயங்கள் உடனே சரியாகும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்